“இந்த தேர்தல் மம்தாவின் கவுரவத்துக்கான போராட்டம்” - திரிணமூல் எம்.பி. கருத்து

“இந்த தேர்தல் மம்தாவின் கவுரவத்துக்கான போராட்டம்” - திரிணமூல் எம்.பி. கருத்து
Updated on
1 min read

கொல்கத்தா: தற்​போதைய மேற்கு வங்க தேர்​தல், முதல்​வர் மம்தா பானர்​ஜி​யின் கவுர​வத்​துக்​கான போராட்​டம் என்று திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் ஜாதவ்​பூர் தொகுதி எம்​.பி. சயோனி கோஷ் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: முதல்​கட்ட தேர்​தல் நடை​பெற்ற 152 தொகு​தி​களில் 100-க்​கும் மேற்​பட்ட இடங்​களை நாங்​கள் வெல்​வோம். இந்​தத் தொகு​தி​களில் எங்​கள் கட்​சி​யின் கோட்​டைகளாகக் கருதப்​படும் முர்​ஷி​தா​பாத், கிழக்கு, மேற்கு மிட்​னாபூர், புரூலி​யா, பாங்​கு​ரா, ஜார்​கி​ராம், பிர்​பூம் போன்ற பகு​தி​களும் அடங்​கும்.

களத்​திலிருந்து வரும் தகவல்​கள் எங்​களுக்கு மிக​வும் சாதக​மாக உள்​ளன. மக்​கள் எங்​களுக்கு ஆதர​வளிக்க திரண்டு வரு​கின்​றனர். இது வங்​காளத்​தின் மற்​றும் மம்தா பானர்​ஜி​யின் கவுர​வத்​துக்​கான ஒரு போராட்​டம். நாங்​கள் வெற்றி பெறு​வோம். வங்​காளம் வெற்றி பெறும். முதல்​கட்ட தேர்​தலில் ஆண்​களை விடப் பெண்​கள் இரண்டு சதவீதம் கூடு​தலாக வாக்​களித்​துள்​ளனர். இது திரிணா​முல் கட்​சி​யின் வெற்​றிக்​கான அறிகுறி​யாகும்.

முதல்​கட்ட தேர்​தலில் சாதனை அளவாக 93% வாக்​கு​கள் பதி​வாகி​யுள்​ளது. இது மாற்​றத்​துக்​கான வாக்கு என்று பாஜக கூறுகிறது. ஆனால் அதுபற்றி எங்​களுக்கு கவலை இல்​லை. பாஜக தலை​வர்​கள் 365 நாட்​களும் இங்​கேயே தங்​கி​யிருந்​தா​லும் பாஜக​வால் வெற்றி பெற முடி​யாது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

“இந்த தேர்தல் மம்தாவின் கவுரவத்துக்கான போராட்டம்” - திரிணமூல் எம்.பி. கருத்து
மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட பிரச்சாரம் ஓய்ந்தது: 142 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in