கிர் சோம்நாத் மாவட்டத்தில் 3-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க குஜராத் அரசு முடிவு

கிர் சோம்நாத் மாவட்டத்தில் 3-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க குஜராத் அரசு முடிவு
Updated on
1 min read

புதுடெல்லி: ஆந்திராவின் ஸ்ரீஹரி​கோட்​டா, தமிழகத்தின் குலசேகர பட்​டினத்துக்கு அடுத்​த​தாக நாட்​டின் 3-வது ராக்​கெட் ஏவுதளத்தை குஜ​ராத் மாநிலம் கிர் சோம்​நாத் மாவட்​டம் அருகே அமைக்க மாநில அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

குஜ​ராத் சட்​டப்​பேர​வை​யில் பட்​ஜெட் கோரிக்கை குறித்து அறிவியல் மற்​றும் தொழில் ​நுட்​பத் ​துறை அமைச்​சர் அர்​ஜுன் மோத்​வாடியா பேசுகை​யில், ”ராக்​கெட் ஏவுதளம் அமைப்பதற்கான இடம் கிர் சோம்​நாத் மாவட்​டம் அருகே அரபிக் கடல் பகு​தி​யில் அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளது.

விண்​வெளித்​ துறை​யின் கீழ் செயல்​படும் இன்​-ஸ்​பேஸ் நிறுவனத்துடன் ஆலோ​சனை நடத்​திய பிறகு இந்த இடம் அடையாளம் காணப்​பட்​டுள்​ளது. நமது வேண்​டு​கோள்​படி ராக்கெட் ஏவுதளம் அமைப்​ப​தற்கு பொருத்​த​மான இடத்தை இன்-ஸ்​பேஸ் நிறு​வனம் அடை​யாளம் கண்​டுள்​ளது. இதை ஸ்ரீ ஹரிகோட்டா போல் மேம்​படுத்த முடி​யும்” என்​றார்.

இது குறித்து விண்​வெளித் துறை அதி​காரி ஒரு​வர் கூறுகை​யில், ”இந்​தி​யா​வில் ராக்​கெட் ஏவுதளம் அமைக்​கும் பணி​யில் மாநில அரசு அல்​லது தனி​யார் நிறு​வனம் கூட ஈடு​படலாம். விண்​வெளித் ​துறை​யில் மேற்​கொள்​ளப்​பட்ட சீர்​திருத்​தம் மூலம் இதற்​கான நடை​முறை வகுக்​கப்​பட்​டுள்​ளது. இங்​கிருந்து செயற்​கைக் கோள்களை ஏவுவதற்​கான பணி​களை மேற்​கொள்ள இன்​-ஸ்​பேஸ் நிறு​வனத்​தின் முன் அனு​மதி தேவை” என்​றார்.

கிர் சோம்நாத் மாவட்டத்தில் 3-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க குஜராத் அரசு முடிவு
திரிணமூல் vs பாஜக: மேற்கு வங்க தேர்தல் களம் 2026 எப்படி? - ஒரு தெளிவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in