நாடாளுமன்றத்தில் முதன்முறையாக இசைக்கப்பட்ட ‘வந்தே மாதரம்’ பாடல்

மழைக்காலக் கூட்டத்தொடர் நிறைவுபெற்றது
நாடாளுமன்றத்தில் முதன்முறையாக இசைக்கப்பட்ட ‘வந்தே மாதரம்’ பாடல்
Updated on
1 min read

புதுடெல்லி: நாடாளுமன்ற வரலாற்​றிலேயே முதன்​முறை​யாக ‘வந்தே மாதரம்’ தேசி​யப் பாடல் இசைக்​கப்​பட்டு வியாழக்​கிழமை அவை நடவடிக்​கைகள் தொடங்​கின.

நாடாளு​மன்​றத்​தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்​று, அவை​யின் நடவடிக்​கைகள் தொடங்​கியதும் வந்தே மாதரம் பாடலின் ஆறு சரணங்​கள் இசைக்​கப்​பட்​டன. அப்போது பிரதமர் நரேந்​திர மோடி, எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி உள்​ளிட்ட அனைத்து உறுப்​பினர்​களும் எழுந்து நின்று தேசி​யப் பாடலுக்கு மரி​யாதை செலுத்​தினர். தேசி​யப் பாடலுக்கு சட்​டப்​பூர்வ பாது​காப்பை வழங்​கும் புதிய சட்​டம் அமலுக்கு வந்த நிலையில், இந்த வரலாற்​றுச் சிறப்​புமிக்க நிகழ்வு நாடாளுமன்றத்தில் அரங்​கேறி​யுள்​ளது.

தேசிய கீதத்​துக்கு இணை​யான சட்​டப்​பூர்வ அந்​தஸ்தை வந்தே மாதரத்​துக்கு வழங்​கும் இப்​பு​திய சட்​டத்​தின்​படி, தேசி​யப் பாடலை வேண்​டுமென்றே தடுப்​பதோ அல்​லது இடையூறு விளை​விப்​பதோ தண்​டனைக்​குரிய குற்​ற​மாகும். முன்​ன​தாக, மத்​திய உள்​துறை அமைச்​சகம் வெளி​யிட்ட அரசாணை​யில், குடியரசுத் தலை​வர் வரு​கை, தேசி​யக் கொடி ஏற்​று​தல் மற்​றும் ஆளுநர்களின் உரைகளின் போது வந்தே மாதரத்​தின் ஆறு சரணங்களும் இசைக்​கப்பட வேண்​டும் என வழி​காட்டு நெறி​முறை​கள் வகுக்​கப்​பட்​டிருந்​தன.

தேசி​யப் பாடல் இசைக்​கப்​பட்​டதைத் தொடர்ந்​து, எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு நடுவே மக்​களவை மற்​றும் மாநிலங்​களவை ஆகிய இரு அவை​களும் கால​வரை​யின்றி ஒத்திவைக்​கப்​பட்​டன. வழக்​க​மாக கூட்​டத்​தொடரின் நிறைவு நாளில் கூட்​டத்​தொடர் செயல்​பாடு குறித்த சபா​நாயகரின் நிறைவுரையை சபா​நாயகர் ஓம் பிர்லா இம்​முறை வாசிக்கவில்லை.

ஜூலை 20-ல் நாடாளு​மன்​றம் தொடங்​கிய​தில் இருந்தே நீட் தேர்வு வினாத்​தாள் கசிவு மற்​றும் ராமர் கோயில் நன்​கொடை முறை​கேடு புகார்​கள் தொடர்​பாக இரு அவை​களின் நடவடிக்​கைகளும் தொடர்ந்து முடங்​கின.

நாடாளுமன்றத்தில் முதன்முறையாக இசைக்கப்பட்ட ‘வந்தே மாதரம்’ பாடல்
முதல்வர் விஜய் தலைமையில் ‘வெற்றித் தமிழ்நாடு’ முதலீட்டாளர் மாநாடு: ரூ.67,452 கோடிக்கு 97 ஒப்பந்தங்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in