திரிணமூல் கட்சியிலிருந்து விலகிய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் பாஜகவில் இணைந்தார்

டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவில் இணைந்த டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸுக்கு இனிப்பு ஊட்டுகிறார் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு. உடன் பாஜக எம்.பி. அனில் பலுனி. படம்: பிடிஐ

டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவில் இணைந்த டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸுக்கு இனிப்பு ஊட்டுகிறார் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு. உடன் பாஜக எம்.பி. அனில் பலுனி. படம்: பிடிஐ

Updated on
1 min read

புதுடெல்லி: ​திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சியி​லிருந்து வில​கிய டென்​னிஸ் முன்னாள் வீரர் லியாண்​டர் பயஸ் பாஜக​வில் இணைந்​துள்​ளார்.

கடந்த 2021 அக்​டோபரில் கோவா​வில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், டென்​னிஸ் ஜாம்​ப​வான் லியாண்​டர் பயஸ், மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்ஜி முன்​னிலை​யில் திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யில் இணைந்​தார்.

இந்​நிலை​யில், 5 ஆண்​டு​களுக்​குப் பிறகு திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து லியாண்டர் பயஸ் அண்மையில் விலகினார். இந்நிலையில், டெல்​லி​யில் உள்ள பாஜக தலை​மையகத்​தில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் லியாண்​டர் பயஸ் பார​திய ஜனதா கட்​சி​யில் இணைந்​தார்.

இதுகுறித்து அவர் கூறும்​போது, “இது என் வாழ்​வின் ஒரு முக்​கிய​மான நாள். பிரதமர் நரேந்​திர மோடி, மத்​திய அமைச்​சர் அமித் ஷா மற்​றும் பாஜக தேசிய தலை​வர் நிதின் நபின் ஆகியோ​ருக்கு நன்​றியைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன். நாட்​டின் இளைஞர்​களுக்​கும் மக்​களுக்​கும் சேவை செய்ய பாஜக எனக்கு ஒரு வாய்ப்​பளித்​துள்​ளது. பாஜக​வின் உறுப்​பினர் என்​பது என் மீதான ஒரு பொறுப்​பு” என்​றார்.

கொல்​கத்​தா​வில் பிறந்த லியாண்டர் பயஸ், தற்​போது அவரது தந்தை வீஸ் பயஸ் பிறந்த இடமான கோவா​வில் வசித்து வரு​கிறார். மேற்கு வங்​கத்​தில் இன்​னும் சில வாரங்​களில் தேர்​தல் நடை​பெறவுள்ள நிலை​யிலும், அடுத்த ஆண்டு கோவா சட்​டப்​பேரவை தேர்​தல் வரவுள்ள நிலை​யிலும், லியாண்​டர் பயஸின் புதிய அரசி​யல் பயணம் அனை​வரின்​ கவனத்​தை​யும்​ ஈர்த்​துள்​ளது.

<div class="paragraphs"><p>டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவில் இணைந்த டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸுக்கு இனிப்பு ஊட்டுகிறார் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு. உடன் பாஜக எம்.பி. அனில் பலுனி. படம்: பிடிஐ</p></div>
294 தொகுதியிலும் நானே போட்டியிடுவதாக நினைத்து வாக்களியுங்கள்: மம்தா பானர்ஜி பிரச்சாரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in