கைகள் இல்லாத மாற்றுத்திறனாளி பக்தருக்கு உணவை ஊட்டி விட்ட தேவஸ்தான ஊழியர்: குவியும் பாராட்டு

கைகள் இல்லாத மாற்றுத்திறனாளி பக்தருக்கு உணவை ஊட்டி விட்ட தேவஸ்தான ஊழியர்: குவியும் பாராட்டு
Updated on: 
1 min read

ஏலூரு: கைகள் இல்​லாத மாற்றுத்திறனாளி பக்​தருக்கு தேவஸ்தான ஊழியர் உணவை ஊட்டி விட்ட சம்​பவம் சமூக வலை​தளங்​களில் பாராட்​டு​களைப் பெற்று வரு​கிறது.

ஆந்திராவில் உள்ள ஏலூரு பகு​தி​யில் பிரசித்தி பெற்ற துவாரகா திரு​மலா​வில் பெரு​மாள் கோயில் உள்​ளது. அங்கு தின​மும் நூற்றுக்​கணக்​கான பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​கின்​றனர். இவர்​களுக்கு தேவஸ்​தானம் சார்​பில் மதி​யம் அன்​ன​தானம் வழங்கப்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில், பீமடோலு மண்​டலம், பாத்​தூரு கிராமத்தை சேர்ந்த ராம்​பாபு என்ற மாற்​றுத் திறனாளிபக்​தர், இக்​கோ​யிலுக்கு கடந்த 2 நாட்​களுக்கு முன்​னர் சுவாமி தரிசனம் செய்ய வந்​தார்.

தரிசனத்​துக்கு பின்​ அவர், அன்​ன​தானம் வழங்​கும் இடத்​துக்​குச் சென்று உட்​கார்ந்​தார். அவருக்கு வாழை இலை போட்டு சாப்​பாடு பரி​மாறப்​பட்​டது. ஆனால், ராம்​பாபுவுக்கு இரு கைகளும் இல்லாததால் அவர் குனிந்து சாப்​பிட மிக​வும் கஷ்டப்​பட்​டார். இதனை கண்ட தேவஸ்​தான பெண் ஊழியர் காயத்ரி அந்த பக்தரிடம் சென்​று, அவருக்கு உணவை ஊட்டி விட்​டார். பக்​தரும் திருப்​தி​யாக சாப்​பிட்​டு​விட்​டு, ஊழியர் காயத்​ரிக்கு நன்றி தெரிவித்து விட்டு புறப்​பட்டார்.

இந்த வீடியோ சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி வைரல் ஆனது. பலர் காயத்​ரி​யின் மனி​தாபி​மான செயலை பாராட்டி வருகின்​றனர். அந்த வீடியோவைப் பார்த்த ஆந்​திர முதல்​வர் சந்திர​பாபு நாயுடு​வும் ‘சபாஷ் காயத்​ரி’ என தலைப்​பிட்​டு, மக்​கள் சேவையே மகேசன் சேவை என்ற வாக்​கி​யத்​துக்கு எடுத்துக்காட்டாக நடந்து கொண்ட கா​யத்​ரிக்கு எனது வாழ்த்துகள். அவரை மனதார பா​ராட்​டு​கிறேன்​ என்​று கூறி உள்ளார்​.

கைகள் இல்லாத மாற்றுத்திறனாளி பக்தருக்கு உணவை ஊட்டி விட்ட தேவஸ்தான ஊழியர்: குவியும் பாராட்டு
உ.பி: யூடியூப்பில் ஆங்கிலம் கற்றுத்தரும் +2 படித்த கிராமப் பெண்: பிரியங்கா சோப்ரா பகிர்ந்த வீடியோவால் வைரல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in