

கோல்டு மேன் சூரிய பாபு
ஹைதராபாத்: ஹைதராபாத் பாத்தபஸ்தி பகுதியை சேர்ந்தவர் சூரியகுமார். இவர் கிலோ கணக்கில் தங்க ஆபரணங்களை அணிந்து உலா வருவார்.
இதனால் இவரை கோல்டு மேன் என்றும் சூரிய பாபு என்றும் மக்கள் அழைப்பதுண்டு. இவர் குறைந்த விலைக்கே தங்கம் வாங்கி கொடுப்பதாக பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டதாக சிலர் ஹைதராபாத் நாராயண கூடா போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர்.
அதில், தனக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஹைதராபாத் போலீஸ் ஆணையர் ஆகியோர் நல்ல நண்பர்கள். தங்கம் வாங்கி கொடுக்காத காரணத்தினால் பணத்தை திருப்பி தர வேண்டும் என கேட்டதற்கு சில நாட்களுக்கு முன் ரூ.20 லட்சத்துக்கு காசோலையும், 3 ஐபோன்களும் கொடுத்தார். அந்த காசோலையில் பணம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், செல்போன்களை மீண்டும் தானே வீட்டுக்கு வந்து பிடுங்கி சென்று விட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக கோல்டு மேன் சூரிய பாபு மீது நாராயண கூடா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளனர்.