சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பு: முன்னாள் அமைச்சருக்கு எதிரான மறு ஆய்வு மனு தள்ளுபடி

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பு: முன்னாள் அமைச்சருக்கு எதிரான மறு ஆய்வு மனு தள்ளுபடி
Updated on
1 min read

சென்னை: சொத்​துக் குவிப்பு வழக்​கில் இருந்து முன்​னாள் அமைச்​சர் கீதா ஜீவன் மற்​றும் அவரது குடும்​பத்​தினர் விடுவிக்​கப்​பட்​டதை எதிர்த்து 839 நாட்​கள் கால​தாமத​மாக தாக்​கல் செய்​யப்​பட்ட மறு ஆய்வு மனுவை விசா​ரணைக்கு ஏற்க மறுத்த உயர் நீதி​மன்​றம் அந்த மனுவை தள்​ளு​படி செய்​துள்​ளது.

கடந்த 1996-2001 திமுக ஆட்​சிக் காலத்​தில் வரு​மானத்​துக்கு அதி​க​மாக ரூ.2.31 கோடி அளவுக்கு சொத்து குவிப்​பில் ஈடு​பட்​ட​தாக தூத்​துக்​குடி எம்​எல்​ஏ-​வாக பதவி வகித்த என்​.பெரிய​சாமி, அவரது மனைவி எபினேசர் அம்​மாள், மகளும் முன்​னாள் அமைச்​சரு​மான கீதா ஜீவன், அவரது கணவர் ஜீவன் ஜேக்​கப், கீதா ஜீவனின் அண்​ணன் ராஜா, தம்​பி​யும் தற்​போதைய தூத்​துக்​குடி மாநக​ராட்சி மேயரு​மான ஜெகன் பெரிய​சாமி உள்​ளிட்​டோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​தனர்.

என்​.பெரிய​சாமி கடந்த 2017-ம் ஆண்டு உடல்​நலக்​குறை​வால் மரணமடைந்​தார். இந்​நிலை​யில், எஞ்​சிய முன்​னாள் அமைச்​சர் கீதா ஜீவன் உள்​ளிட்ட குடும்​பத்​தினர் அனை​வரை​யும் விடு​வித்து தூத்​துக்​குடி முதன்மை அமர்வு நீதி​மன்​றம் கடந்த 2022-ல் தீர்ப்​பளித்​தது.

839 நாட்​கள் தாமத​ம்

இந்த தீர்ப்பை எதிர்த்து தூத்​துக்​குடி தொகுதி வாக்​காள​ரான சண்​முகசுந்​தரம் என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் 839 நாட்​கள் தாமத​மாக மறு ஆய்வு மனுவை தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த மனு, நீதிபதி ஜி.கே. இளந்​திரையன் முன்பு விசா​ரணைக்கு வந்​தது. தாமதத்தை சுட்​டிக்​காட்​டிய நீதிப​தி, மனுவை வி​சா​ரணைக்கு ஏற்க மறுத்து தள்​ளு​படி செய்​து உத்​தர​விட்​டுள்​ளார்​.

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பு: முன்னாள் அமைச்சருக்கு எதிரான மறு ஆய்வு மனு தள்ளுபடி
அமோனியா வாயுக் கசிவு விபத்து மேலும் 2 பேர் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in