யோகிக்கு ‘முருகன்' படம் தந்து வாழ்த்து பெற்ற தமிழர்

யோகிக்கு ‘முருகன்' படம் தந்து வாழ்த்து பெற்ற தமிழர்
Updated on
1 min read

புதுடெல்லி: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடவுள் முருகன் படம் அளித்து அம்மாநில ஐபிஎஸ் அதிகாரியும் தமிழருமான சு.ராஜேஷ் வாழ்த்து பெற்றார்.

தமிழ்நாட்டின் கரடிகுளம், கோவில்பட்டியை சேர்ந்தவர் சு.ராஜேஷ். 2011-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான இவர் உ.பி. கேடரில் பணியாற்றுகிறார். கடந்த வருடம் டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற இவர் பாந்தா சரகத்தில் பணியாற்றுகிறார். இந்நிலையில் தனது டிஐஜி பணியில் ஒரு வருடம் முடித்த இவர் நேற்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது அவர் தமிழ்க் கடவுளான பழனி முருகன் படத்தை நினைவுப் பரிசாக வழங்கினார். துறவியான முதல்வர் யோகிக்கு இதுவரை எவரும் முருகன் படத்தை வழங்கியதாகத் தெரியவில்லை. எனவே இந்த சந்திப்பு படத்துடன் உ.பி.யின் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

டிஐஜி ராஜேஷிடம் இருந்து படத்தைப் பெற்று மகிழ்ந்த முதல்வர் யோகி, "சிவன், பார்வதிக்கு முதல் மகனாகவும், செல்ல மகனாகவும் இருப்பவர் முருகன்" எனக் குறிப்பிட்டுள்ளார். உ.பி.யில் அண்மையில் திருநெல்வேலியைச் சேர்ந்த டி.பிரகாஷ், ஆண்டனி தேவ் குமார் ஆகிய 2 தமிழர்களுக்கு டிஜிபி அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

யோகிக்கு ‘முருகன்' படம் தந்து வாழ்த்து பெற்ற தமிழர்
ஆந்திர தலைநகர் அமராவதிக்கு அங்கீகாரம் அளிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in