ஆந்திர தலைநகர் அமராவதிக்கு அங்கீகாரம் அளிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

ஆந்திர தலைநகர் அமராவதிக்கு அங்கீகாரம் அளிக்கும் மசோதா  மக்களவையில் நிறைவேற்றம்
Updated on
1 min read

அமராவதி: ஆந்​திர தலைநகர் அமராவ​திக்கு அங்​கீ​காரம் அளிக்கும் மசோதா மக்​களவை​யில் நேற்று நிறைவேற்​றப்​பட்​டது. இதற்கு ஆந்​திர மாநில முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு தனது மகிழ்ச்சியை தெரி​வித்​துள்​ளார்.

ஆந்​திர மாநில தலைநக​ரான அமராவ​திக்கு சட்​டப்​பூர்வ அங்கீகாரம் வழங்​கும் மசோதா தீர்​மானத்​திற்​கு, கடந்த சில நாட்களுக்கு முன் ஆந்​திர பேர​வை​யில் ஒரு​மன​தாக ஒப்​புதல் வழங்​கப்​பட்​டது. இந்த தீர்​மானம் மத்​திய அரசின் ஒப்​புதலுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டது. இதனை தொடர்ந்​து, நேற்று இந்த தீர்மான மசோ​தாவை நாடாளு​மன்​றத்​தில் உள்​துறை இணை அமைச்​சர் நித்​யானந்த ராய் முன் மொழிந்​தார்.

இதன் மீது, தெலுங்கு தேசம், பாஜக, ஜனசே​னா, காங்​கிரஸ், ஒய்.எஸ்​.ஆர் காங்​கிரஸ், சமாஜ்​வாதி உள்​ளிட்ட எம்​பிக்​கள் விவாதம் நடத்​தினர். அதன் பின்​னர், இந்த மசோ​தா​விற்கு மாநில சட்​டப் ​பிரி​வினை மசோதா சட்​டத்​தின் படி ஒப்​புதல் வழங்​கு​வ​தாக சபா​நாயகர் இருக்​கை​யில் இருந்த தென்​னேட்டி கிருஷ்ண பிர​சாத் அறி​வித்​தார்.

இந்த மசோதா இன்று வியாழக்​ கிழமை மாநிலங்​களவைக்கு வர உள்​ளது. இதை மத்​திய அமைச்​சர் நித்​யானந்த ராய் இன்று முன்மொழிய உள்​ளார். அதன் பின்​னர் இதன் மீது மதி​யம் விவாதம் நடத்​தப்​பட்​டு, அதன் பின்​னர் மாநிலங்​களவையில் ஒப்புதல்​ பெறப்​படும்​.

ஆந்திர தலைநகர் அமராவதிக்கு அங்கீகாரம் அளிக்கும் மசோதா  மக்களவையில் நிறைவேற்றம்
உ.பி.யின் கான்பூரில் சிறுநீரகம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மோசடியில் 6 பேர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in