சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்களின் மறைவிடத்தில் ரூ.11 கோடி மதிப்பிலான சுவிஸ் தங்க கட்டிகள் பறிமுதல்

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்களின் மறைவிடத்தில் ரூ.11 கோடி மதிப்பிலான சுவிஸ் தங்க கட்டிகள் பறிமுதல்
Updated on
1 min read

பிஜாப்பூர்: சத்​தீஸ்​கர் மாநில பஸ்​தார் சரக ஐ.ஜி. சுந்​தர்​ராஜ் பட்​டிலிங்​கம் நேற்று கூறிய​தாவது: மாவோ​யிஸ்ட் முக்​கி​யத் தலை​வர் ரூபேஷ் சரணடைந்​ததைத் தொடர்ந்​து, கிளர்ச்​சி​யாளர்​களின் தளபதி பாப்​பா​ராவ் என்​பவருக்​காகப் பெரு​மளவு ரொக்​கம், தங்​கம் பிஜாப்​பூர் வனப்​பகு​திக்கு மாற்​றப்​பட்​ட​தாகத் தகவல் கிடைத்​தது.

இதனடிப்​படை​யில், கடந்த 10 நாட்​களாக நடத்​தப்​பட்ட தீவிர விசா​ரணை​யைத் தொடர்ந்​து, அடர்ந்த வனப்​பகு​தி​யில் உள்ள மாவோயிஸ்ட்​களின் மறை​விடம் கண்​டறியப்​பட்​டது.

அங்​கிருந்து சுவிஸ் முத்​திரை​யுடன் கூடிய தங்க கட்​டிகள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. சுமார் 7.2 கிலோ எடை கொண்ட இந்த தங்க கட்​டிகளின் மதிப்பு ரூ.11.16 கோடி.

தங்​கக் கட்​டிகளில் சுவிஸ் முத்​திரை இருப்​பது​தான் ஆச்​சரி​யத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது. தடய​வியல் சோதனை​களுக்​குப் பின்​னரே இதன் தரம் மற்​றும் உண்​மைத்​தன்மை குறித்​துத் தெரிய​வரும். இது தொடர்​பாகத் தொடர்ந்து விசா​ரணை நடத்தி வரு​கிறோம். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்களின் மறைவிடத்தில் ரூ.11 கோடி மதிப்பிலான சுவிஸ் தங்க கட்டிகள் பறிமுதல்
ஆயுதம் துறந்து மாவோயிஸ்ட் மகன் சரணடைய தந்தை உருக்கமான அழைப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in