உண்மையான ஐயப்ப பெண் பக்தர்கள் 10 முதல் 50 வயது வரை சபரிமலைக்கு செல்வதில்லை: உச்ச நீதிமன்றம் கருத்து

உண்மையான ஐயப்ப பெண் பக்தர்கள் 10 முதல் 50 வயது வரை சபரிமலைக்கு செல்வதில்லை: உச்ச நீதிமன்றம் கருத்து
Updated on
1 min read

புதுடெல்லி: உண்​மை​யான ஐயப்ப பெண் பக்​தர்​கள் 10 முதல் 50 வயது வரை சபரிமலைக்கு செல்​வ​தில்லை என்று உச்​ச நீதிமன்றம் கருத்து தெரி​வித்​துள்​ளது.

சபரிமலை​யில் அனைத்து வயது பெண்​களை​யும் வழிபட அனுமதித்த தீர்ப்​புக்கு எதி​ரான மறு ஆய்வு மனுக்​களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த், நீதிப​தி​கள் பி.வி நாக ரத்தி​னா, எம் எம் சுந்​தரேஷ், ஏ.அமானுல்​லா, ஏ ஜி மசி, பிபி வர்​லே, ஆர் மகாதேவன், ஜோய்​மால்யா பக் ஷி ஆகியோரை கொண்ட ஒன்​பது நீதிப​தி​கள் அடங்​கிய அரசி​யல் ​சாசன அமர்வு விசா​ரித்து வரு​கிறது.

இந்த விசா​ரணை​யின் போது, கடவுள் நம்​பிக்​கையற்​றவர்​கள், கோயி​லில் விதிக்​கப்​பட்​டுள்ள மத ரீதி​யான கட்​டுப் ​பாடு​களை எதிர்த்து வழக்கு தொடர முடி​யு​மா ? பெரும்​பான்​மை​யான நம்பிக்கை​யாளர்​களின் நம்​பிக்கை புண்​படலா​மா ? என்று நீதிபதிகள் கேட்​டனர்.

தீர்ப்​புக்கு ஆதர​வாக​வும், தீர்ப்​புக்கு பிறகு சபரிமலைக்கு சென்று எதிர்ப்​பு​களை சந்​தித்த கனக துர்​கா, பிந்து அம்​மினி சார்​பிலும் மூத்த வழக்​குரைஞர் இந்​திரா ஜெய்​சிங் வாதிடு​கை​யில், "நம்பிக்கை உள்​ளதோ, இல்​லையோ ஆனால் கோயிலுக்கு செல்லும் ​போது மரி​யாதை​யுடன் நடந்து கொள்ள வேண்​டும். சட்ட ரீதி​யான உரிமையை இந்த இரு​வரும் மீற​வில்​லை. சட்​ட ரீ​தி​யான உரிமையை மீட்​கவே போராட வேண்டி உள்​ளது’’ என்று வாதிட்டார்.

அப்​போது நீதிபதி எம்.எம்.சுந்​தரேஷ், "உங்​கள் வாதத்தை ஏற்​றுக்​கொண்​டால் ஒவ்​வொரு நம்​பிக்​கை​யாள​ரும் இப்​படி​தான் வழிபாடு இருக்க வேண்​டும் என சொல்ல தொடங்​கு​வார்​கள். அதற்கு முடிவே இல்​லாமல் போகும்" என்று குறிப்​பிட்​டார்.

மூத்த வழக்​கறிஞர் இந்​திரா ஜெய்​சிங், "10 முதல் 50 வயது வரையிலான பெண்​கள் மிக​வும் ஆக்​கத்​துட​னும், ஊக்​கத்​துட​னும் இருக்​கின்​றனர் இந்த வயதுடைய பெண்​களுக்கு சபரிமலை​யில் அனு​மதி மறுக்​கப்​படு​வது வழி​பாட்டு உரிமை என்ற அடிப்​படை உரிமையை மறுப்​ப​தாகும். சபரிமலை தீர்ப்​புக்​குப் பிறகு இரு பெண்​களும் சபரிமலைக்கு சென்று திரும்​பிய​போது கோயிலை தூய்​மைப்​படுத்த வேண்​டும் என்று சிலர் பேசி​னார்​கள்.

ஒவ்​வொரு மதத்​திற்​கும் தன்​னகத்தே சீர்​திருத்​தம் செய்து கொள்ளும் பண்புகள் உள்ளன" என வாதிட்ட போது, நீதிபதி பிவி நாகரத்தி​னா, "கடவுள் நம்​பிக்​கையற்ற வட இந்​தி​யர் எப்​படி வழிபாட்டு உரிமையை கோர முடி​யும்? வேற்​றுமை​யில் ஒற்றுமையாக இருப்​பது தான் நமது நாட்​டின் பலம். 10 முதல் 50 வரை​யிலுள்ள உண்​மை​யான ஐயப்ப பெண் பக்​தர்​கள் சபரிமலைக்கு செல்​வ​தில்லை" என்று குறிப்​பிட்​டார்​. அடுத்த விசாரணை மே 5ம்​ தேதி​யும்​ தொடர்​கிறது.

உண்மையான ஐயப்ப பெண் பக்தர்கள் 10 முதல் 50 வயது வரை சபரிமலைக்கு செல்வதில்லை: உச்ச நீதிமன்றம் கருத்து
‘மதுரை சித்திரைத் திருவிழா’ ஓர் ஆன்மிக கொண்டாட்டம் மட்டுமே அல்ல... ஏன்?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in