ரத்த உறவுகளுடனான திருமணங்களால் ஏற்படும் மரபணு பாதிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ரத்த உறவுகளுடனான திருமணங்களால் ஏற்படும் மரபணு பாதிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
Updated on: 
1 min read

புதுடெல்லி: நெருங்​கிய ரத்த உறவு​களுக்கு இடையேயான திரு​மணங்​களால் ஏற்​படும் உடல்​நல மற்​றும் மரபணு பாதிப்​பு​களைத் தடுக்க உரிய வழிகாட்​டுதல்​களை வழங்​கக் கோரி, 40% பார்​வைக் குறைபாடு கொண்ட சட்ட மாணவி சாருவி என்​பவர் உச்ச நீதி​மன்​றத்​தில் பொதுநல வழக்கு தொடர்ந்​தார்.

இந்த வழக்கு உச்​சநீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்​றும் நீதிபதி ஜாய்​மால்யா பக் ஷி ஆகியோர் அடங்​கிய அமர்வு முன்​பு விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது பேசிய நீதிப​தி​கள், திரு​மணம் தனிநபர் விருப்​பம் என்​றாலும், அது போதிய விழிப்​புணர்​வுடன் எடுக்​கப்​படும் முடிவாக இருக்க வேண்​டும் என குறிப்​பிட்​டனர். மேலும், சமூக சீர்​திருத்​தச் சட்​டம் இயற்​று​வது நாடாளு​மன்​றம் மற்​றும் சட்​டமன்​றங்​களின் அதி​கார வரம்​புக்​குட்​பட்​டது என்​றும் தெரி​வித்​தனர்.

அப்​போது, மனுதா​ரர் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர், தென் மாநிலங்​களில் ரத்த உறவுத் திரு​மணங்​கள் 28 சதவீதம் வரை அதி​க​மாக உள்​ள​தாகவும், கிராமப்​புறங்​களில் இதன் பின்​விளைவு​கள் தெரியாமலேயே திரு​மணம் செய்து கொள்​வ​தாகவும் சுட்​டிக்​காட்​டினார். அதற்கு தலைமை நீதிபதி சூர்ய காந்த், நகர்ப்​புறங்​களி​லும் கூட இது காணப்​படுவ​தாக குறிப்​பிட்​டதோடு, இந்த முக்​கியப் பிரச்​சினையைக் கையில் எடுத்​ததற்​காக மனுதா​ரரான மாற்​றுத்​திறனாளி சட்ட மாணவி சாரு​விக்கு பாராட்டு தெரி​வித்​தார்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்​பாக கிராமப்​புறங்​களில் விழிப்​புணர்வு ஏற்​படுத்த அங்​கன்​வாடி பணி​யாளர்​கள் மற்​றும் பஞ்​சாயத்து அமைப்​பு​களை ஈடு​படுத்​தலாம் என்று யோசனை தெரி​வித்த நீதிப​தி​கள், ரத்த உறவுத் திரு​மணங்​களால் ஏற்​படும் பாதிப்​பு​கள் குறித்து மக்​களிடையே அறி​வியல் ரீதி​யி​லான விழிப்​புணர்வை ஏற்​படுத்த, தகுந்த சட்​டம் இயற்​று​வது குறித்​துப் பரிசீலிக்​கவும் அல்​லது பள்ளி, கல்​லூரி​களில் பாடத்​திட்​டங்​களைச் சேர்ப்​பது உள்​ளிட்ட விரிவான விழிப்​புணர்​வுப் பிரச்​சா​ரங்​களை முன்​னெடுப்​பது குறித்து மத்​திய அரசு பதிலளிக்க நோட்​டீஸ் பிறப்​பித்து உத்​தர​விட்​டனர்.

ரத்த உறவுகளுடனான திருமணங்களால் ஏற்படும் மரபணு பாதிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு பதிலாக ஒவைசிக்கு அணிவகுப்பு மரியாதை

X