

அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார்
மும்பை: மகாராஷ்டிராவின் ஆளும் மகாயுதி கூட்டணியில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் துணை முதல்வராக இருந்த இக்கட்சியின் தலைவர் அஜித் பவார் விமான விபத்தில் நேற்று முன்தினம் இறந்தார். இவரது மனைவி சுனேத்ரா பவார் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.
இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் குறித்து இக்கட்சியைச் சேர்ந்த மாநில உணவுத்துறை அமைச்சர் நர்ஹாரி ஜிர்வால் கூறுகையில், ”மகாராஷ்டிர அமைச்சரவையில் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் சேர்க்கப்பட வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.
நாங்கள் இது குறித்து தலைமையுடன் பேசி முடிவெடுப்போம். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு பிரிவுகள் ஏற்கெனவே ஒன்றாக உள்ளோம். பிரிந்திருப்பதில் அர்த்தம் இல்லை என அனைவரும் உணர்கிறோம்” என்று தெரிவித்தார்.