ரஞ்சி கோப்பையில் பரோடா அணி 247 ரன்கள் சேர்ப்பு

ரஞ்சி கோப்பையில் பரோடா அணி 247 ரன்கள் சேர்ப்பு
Updated on
1 min read

சேலம்: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழ்​நாடு - பரோடா அணி​கள் இடையிலான ஆட்​டம் சேலத்​தில் உள்ள சேலம் கிரிக்​கெட் பவுண்​டேஷன் மைதானத்​தில் நேற்று தொடங்​கியது.

டாஸ் வென்று பேட் செய்த பரோடா அணி 72 ரன்​களுக்கு 4 விக்​கெட்​களை இழந்​தது. ஷிவாலிக் சர்மா 35, ஜோத்​ஸ்​னில் சிங் 10, ஷஸ்​வத் ராவத் 5, விஷ்ணு சோலங்கி 9 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். 5-வது விக்​கெட்​டுக்கு சுக்​ரித் பாண்​டே, நினாத் ரத்வா ஜோடி நிதான​மாக விளை​யாடி பார்ட்​னர்​ஷிப்பை கட்​டமைத்​தது. 85 ரன்​கள் சேர்த்த இந்த ஜோடியை சாய் கிஷோர் பிரித்தார்.

நினாத் ரத்வா 112 பந்​துகளில், 9 பவுண்​டரி​களு​டன் 66 ரன்​கள் எடுத்த நிலை​யில் சாய் கிஷோர் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதையடுத்து களமிறங்​கிய கேப்டன் அதித் ஷேத்​தும் நிதான​மாக விளை​யாடி​னார். முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் பரோடா அணி 90 ஓவர்களில் 5 விக்​கெட்​கள் இழப்புக்கு 247 ரன்​கள் எடுத்​தது.

சுக்​ரித் பாண்டே 222 பந்​துகளில், 8 பவுண்​டரி​களு​டன் 73 ரன்களும், அதித் ஷேத் 104 பந்​துகளில், 45 ரன்​களும் சேர்த்து களத்​தில் இருந்​தனர். தமிழ்​நாடு அணி சார்​பில் ஜெக​நாதன் ஹெம்​சுதேஷன் 3 விக்​கெட்​களை​யும், சாய் கிஷோர் 2 விக்​கெட்​களை​யும் கைப்​பற்​றினர். கைவசம் 5 விக்​கெட்​கள் இருக்க பரோடா அணி இன்று 2-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்​து விளை​யாடு​கிறது.

ரஞ்சி கோப்பையில் பரோடா அணி 247 ரன்கள் சேர்ப்பு
வரலாறு காணாத உச்சத்தை நோக்கி நகரும் தங்கம்: பவுன் விலை ரூ.1.34 லட்சம் தாண்டியது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in