கர்நாடக புதிய ஆளுநராக சுதா யாதவ் பதவியேற்பு

கர்நாடக புதிய ஆளுநராக சுதா யாதவ் பதவியேற்பு
Updated on: 
1 min read

பெங்களூரு: அண்மையில் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்களை குடியரசு தலைவர் முர்மு நியமித்தார். இதில் கர்நாடக மாநிலத்தின் புதிய ஆளுநராக பாஜக மூத்த தலைவர் சுதா யாதவ் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று காலை பெங்களூருவில் உள்ள லோக் பவனில் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விபுபக்ரு தலைமையில் புதிய ஆளுநரின் பதவியேற்பு விழா நடைபெற்றது.

இதில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், துணை முதல்வர் பரமேஸ்வரா, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா, பதவி விலகிய முன்னாள் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விபுபக்ரு புதிய ஆளுநர் சுதா யாதவுக்கு ஆளுநராக பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

கர்நாடகாவின் 2-வது பெண் ஆளுநராக பதவியேற்ற சுதா யாதவுக்கு முன்னாள் ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் பூங்கொத்துகளை கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தனர். இதற்கு முன்பாக வி.எஸ்.ரமாதேவி முதல் பெண் ஆளுநராக பதவி வகித்தார்.

கர்நாடக புதிய ஆளுநராக சுதா யாதவ் பதவியேற்பு
சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே கைது - டெல்லி போராட்டத்தில் நடந்தது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in