

பத்ராச்சலம்: ஆந்திர மாநிலம் அமராவதியில் கல்லூரியில் படிக்கும் 7 மாணவர்கள் தெலங்கானா மாநிலம், பத்ராச்சலம் அருகே உள்ள கூனவரம் எனும் பகுதிக்கு சென்றனர். அங்கு நேற்று காலை கோதாவரி நதியில் நீந்தினர்.
இந்நிலையில் ஆழமான பகுதிக்கு சென்றதால் 5 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். தப்பிய இரு மாணவர்கள் அளித்த தகவலின்பேரில் படகுகள் மூலம் தேடும் பணி தொடங்கியது. இதில் ஸ்ரீதர், அபிராம் ஆகிய இரு மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். தேஜு, நவதீப், சதீஷ்குமார் ஆகிய 3 பேரை தேடும் பணி தொடர்கிறது.