கர்நாடகாவில் நீர்யானை தாக்கி மருத்துவர் உயிரிழப்பு

கர்நாடகாவில் நீர்யானை தாக்கி மருத்துவர் உயிரிழப்பு
Updated on
1 min read

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் ஷிமோ​கா​வில் தியா​வரே​கொப்பா வனவிலங்கு சரணால​யம் உள்​ளது. அங்​குள்ள கால்​நடை மருத்​து​வ​மனை​யில் பயிற்சி மருத்​து​வ​ராக பெங்​களூருவை சேர்ந்த சமீக்‌ஷா ரெட்டி (27) கடந்த 3 மாதங்​களாக பணி​யாற்றி வந்​தார். நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு வழக்​க​மான பணி​களில் ஈடு​பட்​டிருந்த போது, சினை​யாக இருந்த நீர்​யானை அவரை தாக்​கியது.

பலத்த காயமடைந்த சமீக்‌ஷா ரெட்டி மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லப்​பட்​டார். அங்கு தீவிர சிகிச்​சைப் பிரி​வில் அனு​ம​திக்​கப்​பட்ட அவர், நேற்று காலை 6.30 மணி​யள​வில் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார்.

கர்நாடகாவில் நீர்யானை தாக்கி மருத்துவர் உயிரிழப்பு
அமெரிக்கா, ஈரான் இடையிலான போரை இந்தியாவால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in