டெலிகிராம் செயலி வாயிலாக போலி நீட் வினாத்தாள் விற்​ற மாணவர் கைது

டெலிகிராம் செயலி வாயிலாக போலி நீட் வினாத்தாள் விற்​ற மாணவர் கைது
Updated on
1 min read

ஜெய்ப்​பூர்: டெலிகிராம் செயலி வாயி​லாக போலி நீட் வினாத்தாள் விற்​பனை செய்த மாணவர் ஆகாஷ் சவுத்ரி (19) கைது செய்யப்பட்டார். மருத்​துவ இளநிலை படிப்​பு​களுக்​கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3-ம் தேதி நடை​பெற்​றது. முன்​கூட்​டியே வினாத்​தாள் கசிந்​த​தால் இந்த தேர்வு ரத்து செய்​யப்​பட்​டது. நாடு முழு​வதும் நாளை நீட் மறு​தேர்வு நடை​பெற உள்​ளது.

இந்தச் சூழலில் ராஜஸ்​தானின் பில்​வாரா பகு​தியை சேர்ந்த மாணவர் ஆகாஷ் சவுத்​ரி, டெலிகி​ராம் செயலி வாயி​லாக போலி நீட் வினாத்​தாள்​களை விற்​பனை செய்​வ​தாக போலீ​ஸாருக்கு தகவல் கிடைத்​தது. இதன்​பேரில் நேற்று அதி​காலை பில்வாராவில் உள்ள ஆகாஷ் சவுத்​ரி​யின் வீட்​டுக்கு சென்ற போலீஸார் அவரை கைது செய்​தனர். அவரது மொபைல்​போன், லேப் டாப் ஆகியவை பறி​முதல் செய்​யப்​பட்​டது.

இதுகுறித்து இன்​ஸ்​பெக்​டர் சுனில் கூறிய​தாவது: மத்​திய அரசின் எஸ்​-மேக் தளத்​தில் “பேப்​பர் மாபி​யா” என்ற டெலிகி​ராம் செயலி குறித்து புகார்​கள் பதிவு செய்​யப்​பட்​டன. குறிப்​பாக இந்த செயலி வாயி​லாக வினாத்​தாள் விற்​பனை நடை​பெறுகிறது என்று குற்​றம் சாட்​டப்​பட்​டது. விசாரணையில் ஆகாஷ் சவுத்ரி என்​பவர் டெலிகிராம் வாயி​லாக வினாத்​தாள்​களை விற்​பனை செய்​தது உறுதி செய்​யப்​பட்​டது.

இந்​தி​யா​வில் டெலிகி​ராம் செயலிக்கு தடை விதிக்​கப்​பட்டு உள்ளது. ஆனால் இந்த மாணவர் விபிஎன் வசதியை பயன்​படுத்தி டெலிகி​ராம் செயலியை தொடர்ந்து பயன்​படுத்தி உள்​ளார். போலி வினாத்​தாள்​களை தலா ரூ.4,000 முதல் சில ஆயிரங்​கள் வரை விற்​பனை செய்​திருக்​கிறார்.

யுபிஐ மூலம் பணம் பெற்​றிருக்​கிறார். ஆகாஷ் சவுத்ரி தனி​நப​ராக செயல்​பட்​டாரா அல்​லது அவரது பின்​னணி​யில் மோசடி கும்பல்கள் இருக்​கிறதா என்​பது குறித்து தீவிர வி​சா​ரணை நடத்தி வரு​கிறோம்​. இவ்​வாறு இன்​ஸ்​பெக்​டர்​ சுனில் தெரிவித்தார்.

டெலிகிராம் செயலி வாயிலாக போலி நீட் வினாத்தாள் விற்​ற மாணவர் கைது
“ஈரானுக்கு ஒரு பைசா கூட தர முடியாது” - ட்ரம்ப் திட்டவட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in