சோனம் வாங்சுக் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தகவல்

20 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டவர் மருத்துவமனையில் அனுமதி
சோனம் வாங்சுக் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: உண்​ணா​விரதப் போராட்​டம் நடத்தி வரும் சுற்​றுச்​சூழல் ஆர்​வலர் சோனம் வாங்சுக் நேற்று மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

நீட் தேர்வு வினாத்​தாள் கசிவு உள்​ளிட்ட போட்​டித் தேர்வு முறை​கேடு விவ​காரத்​தில், மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி விலக வலி​யுறுத்தி சுற்​றுச் சூழல் ஆர்​வலர் சோனம் வாங்​சுக் டெல்லி ஜந்​தர் மந்​தரில் ஜூன் 28-ம் தேதி கால​வரையற்ற உண்​ணா​விரதப் போராட்​டம் தொடங்​கி​னார். அவருடன் அபிஜித் தீப்கே தலை​மையி​லான கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி என்ற அமைப்​பினரும் போராட்​டத்​தில் பங்​கேற்​றனர்.

போராட்​டம் நேற்று முன்​தினம் 20 நாட்​களைக் கடந்த நிலை​யில் சோனம் வாங்​சுக் உடல்​நிலை மோசமடைந்​தது. அவர் சுமார் 9 கிலோ எடையை இழந்​தார். அவரது உயிரைக் காப்​பாற்ற மத்​திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும் என டெல்லி உயர் நீதி​மன்றம் 2 நாட்​களுக்கு முன்பு உத்​தர​விட்​டது. இந்​நிலை​யில், சோனம் வாங்​சுக் மற்​றும் அவருடன் போராட்​டத்​தில் ஈடு​பட்​டிருப்​பவர்​களுக்கு தின​மும் 2 முறை உடல்நல பரிசோதனை செய்யுமாறு 3 அரசு மருத்​து​வ​மனை​களுக்கு மத்​திய சுகா​தார அமைச்​சகம் உத்​தர​விட்​டது.

போராட்​டம் நேற்று 21-ம் நாளை எட்​டியது. இந்​நிலை​யில், மருத்துவ பணி​யாளர்​களும் சாதாரண உடை அணிந்த போலீஸாரும் நேற்று காலை 7.30 மணிக்கு ஜந்​தர் மந்​தருக்​குச் சென்றனர். அங்கு உண்​ணா​விரதம் மேற்​கொண்​டிருந்த வாங்சுக்கை தூக்கி வாக​னத்​தில் ஏற்​றினர். பின்​னர் அவரை விஎம்எம்சி சப்​தர் ஜங் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​தித்​தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது.

இதுகுறித்து மருத்​து​வ​மனை நிர்​வாகம் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “நீண்ட கால உண்​ணா​விரதம் மேற்​கொண்​டது மற்​றும் நீர்ச்​சத்து குறை​பாடு காரண​மாக சோனம் வாங்​சுக் பலவீன​மாக உள்​ளார். தற்​போது அவரது உடல்​நிலை சீராகஉள்​ளது. அவரது உடல் நிலையை இயல்பு நிலைக்​குக் கொண்டு வர அவருக்​குத் தொடர்ச்சி​யான கண்​காணிப்பு மற்​றும் சிகிச்சை தேவைப்படுகிறது.

எனினும், வாங் சுக் நரம்பு வழி திர​வங்​கள், வாய்​வழி ரீஹைட்​ரேஷன் கரைசல் (ஓஆர்​எஸ்) மற்​றும் இதர மருந்​துகள் எதை​யும் எடுத்​துக்​கொள்ள மறுத்​து​விட்​டார். அவரது ஆரோக்​கி​யத்​தைக் கருத்​தில் கொண்டு சிகிச்​சையை ஏற்​றுக்​கொள்​ளு​மாறு அவருக்கு அறி​வுறுத்​தப்​பட்டு வரு​கிறது” என்று கூறப்​பட்​டுள்​ளது.

முன்​ன​தாக, உயர் நீதி​மன்ற உத்​தர​வின்​படி சோனம் வாங் சுக்கை மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் செல்ல முயன்ற போது, அங்​கிருந்த போ​ராட்​டக்​காரர்​கள் எதிர்ப்பு தெரி​வித்​தனர்​. எனினும்​ ​காவல்​ துறை​யினர்​ அவர்​களை ச​மா​தானப்​படுத்​தி அங்​கிருந்​து கலைந்​து செல்​லு​மாறு அறி​வுறுத்​தினர்​.

சோனம் வாங்சுக் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தகவல்
சிஜெபி நிறுவனர் அபிஜித் மீது மை வீசிய இளம்பெண்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in