வயதான பெற்றோரை வீட்டை விட்டு துரத்திய மகன்: ஆட்சியர் நடவடிக்கையால் மகிழ்ச்சி

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

ஹைதராபாத்: தெலங்​கானா மாநிலம், நல்​கொண்டா மாவட்​டம், மிர்​யால​கூடா பகு​தி​யைச் சேர்ந்த ஏழை தம்​ப​தி​யினர், சிறிய வீட்டில் வசித்​தனர். திரு​மண​மான மகனும் அதே வீட்​டில் வசித்தார். இந்​நிலை​யில், வயதான காலத்​தில் 2 நாட்​களுக்கு முன்பு பெற்​றோரை வீட்டை விட்டு மகன் துரத்தி விட்​டார். அவர்களுக்கு உறவினர்​கள் அடைக்​கலம் கொடுத்​தனர்.

இதனைத் தொடர்ந்​து, நல்​கொண்டா மாவட்ட ஆட்​சி​யர் சந்​திரசேகரிடம் பெற்​றோர் புகார் அளித்​தனர். அதை படித்​துப் பார்த்த ஆட்​சி​யர், மகன் குடி​யிருந்த வீட்​டுக்கு வரு​வாய் அதிகாரிகள் மற்​றும் போலீஸ் அதி​காரி​களை அனுப்பி வைத்​தார்.

அவர்​கள், ‘‘வயதான பெற்​றோரை வீட்டை விட்டு துரத்​தியது பெற்றோர் நல்​வாழ்வு சட்​டம்-2007னை மீறும் செயல். எனவே, இந்த வீட்​டில் உனக்கு இடம் இல்​லை’’ என்று கூறி, மகனை வீட்டை விட்டு வெளி​யேற்​றினர்.

அத்​துடன் வயதான பெற்​றோரை மீண்​டும் அதே வீட்​டில் தங்க வைத்​து, அவர்​களுக்கு தகுந்த பாது​காப்​பை​யும் வழங்​கினர். இதுகுறித்து அறிந்த பொது​மக்​கள், நல்​கொண்டா மாவட்ட ஆட்​சி​யர் சந்​திரசேகரை சமூக வலை​தளங்​களில்​ வெகு​வாக பா​ராட்​டி வரு​கின்​றனர்​.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
மேற்காசிய போர் நெருக்கடி தொடர்பாக பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் ஆலோசனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in