ராகுல் காந்தி வீட்டில் தீபாவளி தேநீர் விருந்து: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்பு

ராகுல் காந்தி வீட்டில் தீபாவளி தேநீர் விருந்து: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்பு
Updated on: 
1 min read

புதுடெல்லி: தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் பதவி விலக வலியுறுத்தி காங்​கிரஸ் கட்சி பல்​வேறு போராட்​டங்​களை நடத்தி வரு​கிறது.

இந்​நிலை​யில் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி, டெல்​லி​யில் உள்ள தனது இல்​லத்​தில் தீபாவளி தேநீர் விருந்து அளித்​தார்.

இந்​நிகழ்ச்​சி​யில், காங்​கிரஸ் நாடாளு​மன்​றக் கட்​சித் தலை​வர் சோனியா காந்தி, பொதுச் செய​லா​ளர்​கள் பிரியங்கா காந்தி, ஜெய்​ராம் ரமேஷ், சச்​சின் பைலட், குமாரி செல்ஜா உள்​ளிட்ட மூத்த தலை​வர்​கள் பங்​கேற்​றனர்.

இமாச்​சல பிரதேச முதல்​வர் சுக்​விந்​தர் சிங் சுகு, கர்​நாடக முதல்​வர் டி.கே. சிவகுமார் ஆகியோ​ரும் வந்​திருந்​தனர். முன்​னாள் முதல்​வர்​கள் பூபிந்​தர் சிங் ஹூடா (ஹரியானா), பூபேஷ் பகேல் (சத்​தீஸ்​கர்), அசோக் கெலாட் (ராஜஸ்​தான்), ஹரீஷ் ராவத் (உத்​த​ராகண்ட்), திக்​விஜய சிங் (ம.பி.) ஆகியோ​ரும் கலந்​து​கொண்​டனர்.

இந்த விருந்​தில் ராகுல் காந்தி அரசி​யல் பேசாமல், தலை​வர்​களு​டன் கல​கலப்​பாக உரையாடி தீபாவளி வாழ்த்​துகளை மட்​டுமே பகிர்ந்து கொண்​ட​தாகக் கூறப்​படு​கிறது.

கட்​சி​யினரின் ஒற்​றுமையை வெளிப்​படுத்த இது சிறந்த வாய்ப்​பாக அமைந்​தா​லும், வாக்​குத் திருட்​டுப் பிரச்​சா​ரத்​தைத் தீவிர​மாக முன்​னெடுக்​கும் முயற்​சி​யாகவே இது பார்க்​கப்​படு​கிறது.

விருந்​துக்​குப் பின் மூத்த தலை​வர் சச்​சின் பைலட் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “தேநீர் விருந்​தில் அரசி​யல் பேசப்​பட​வில்லை. ஆனால், தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமாரின் செயல்​பாடுகள் அரசி​யலமைப்​புக்கு எதிரானவை.

ஜனநாயகத்​தைக் காக்க வேண்​டிய​வர்​களே தவறி​விட்​டனர் என்​ப​தற்​கான ஆதா​ரங்​களை ராகுல் பலமுறை சுட்​டிக்​காட்​டியுள்​ளார். 140 கோடி மக்​களில் ஒரு​வருக்கு மட்​டும் வாழ்​நாள் சட்​டப் பாது​காப்பு வழங்​கப்​பட்​டிருப்​பது ஏன்?” எனக் கேள்வி எழுப்​பினார்.

ராகுல் காந்தி வீட்டில் தீபாவளி தேநீர் விருந்து: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்பு
சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி ஹரி பாக்ஸர் அமெரிக்காவில் கைது

X