ரூ.1-க்கு காலணி விற்பனை: கூட்டத்தில் கேரள போலீஸார் தடியடி

ரூ.1-க்கு காலணி விற்பனை: கூட்டத்தில் கேரள போலீஸார் தடியடி
Updated on
1 min read

கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் உள்ள ஒரு கடை நிர்வாகம், முதலில் வரும் 100 பேருக்கு 1 ரூபாய்க்கு காலணி வழங்கப்படும் என விளம்பரம் செய்தது.

இதனால் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள், அதிகாலை 2 மணியிலிருந்தே அப்பகுதியில் திரண்டனர். இதனால் அங்கு நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதித்தது. நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால், கூட்டத்தைக் கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியதாக கடையின் உரிமையாளர்களை அழைத்துச் சென்ற போலீஸார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.1-க்கு காலணி விற்பனை: கூட்டத்தில் கேரள போலீஸார் தடியடி
“குடும்பத்தின் தலைவர் பெண்களே!” - கேரள மாணவர்களுடன் கலந்துரையாடிய ராகுல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in