“குடும்பத்தின் தலைவர் பெண்களே!” - கேரள மாணவர்களுடன் கலந்துரையாடிய ராகுல்

“குடும்பத்தின் தலைவர் பெண்களே!” - கேரள மாணவர்களுடன் கலந்துரையாடிய ராகுல்
Updated on
1 min read

புதுடெல்லி: சர்​வ​தேச மகளிர் தினத்தை முன்​னிட்டு (மார்ச் 8), காங்​கிரஸ் தலை​வர் ராகுல் காந்தி கேரளா மாணவர்​களு​டன் கலந்​துரை​யாடிய வீடியோவை நேற்று வெளி​யிட்​டார்.

அதில் அவர் குறிப்​பிட்​டுள்​ள​தாவது: "பெண்​கள் ஆண்​களை விட அதி புத்​தி​சாலிகள். எனது குடும்​பத்​தில் என் பாட்​டி​தான் (இந்​திரா காந்​தி) பாஸ். பெண்​கள்​ தான் குடும்​பத்​தின் உண்​மை​யான தலைவர்​கள் என்​ப​தைப் பார்த்து வளர்ந்​தவன் நான். எனது குடும்பத்​தில் எப்​போதும் பெண்​களின் எண்​ணிக்​கையே அதிகமாக இருக்​கும்.

ஆண்​களைப் பொருத்​தவரை​யில் எதற்​கும் அவசரப்படுபவர்களாக​வும், தேவையற்ற விஷ​யங்​களில் கவனத்தைச் சிதற​விடு​பவர்​களாக​வும் இருக்​கிறார்​கள். ஆனால், பெண்​கள் நேரடி அதி​காரத்​தைச் செலுத்​தாமல், மறைமுக அதி​காரத்​தைப் பயன்​படுத்​துகிறார்​கள். அதுவே மிக​வும் பலனளிக்​கக்​ கூடிய​தாக இருக்​கிறது.

பெண்​கள் தங்​கள் ஆற்​றலை உணர்ந்து செயல்​பட்​டால், சமூகத்​தில் மிகப்​பெரிய மாற்​றத்​தைக் கொண்டுவர முடி​யும். பெண்கள் முன்​னேற முழு உரிமை அளிக்கப்பட வேண்​டும். இவ்​வாறு ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்​.

“குடும்பத்தின் தலைவர் பெண்களே!” - கேரள மாணவர்களுடன் கலந்துரையாடிய ராகுல்
Accused: பாலியல் குற்றச்சாட்டும், ‘கெத்து’ கீதிகா அணுகுமுறை மாற்றமும் | திரை தேவதைகள் 08

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in