சபரிமலை வழிபாட்டுக்கு எதிரான தீர்ப்பு - மறுஆய்வு மனுவை நாளை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

சபரிமலை வழிபாட்டுக்கு எதிரான தீர்ப்பு - மறுஆய்வு மனுவை நாளை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
Updated on
1 min read

புதுடெல்லி: சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் அனைத்து வயது பெண்​களும் வழிபட கடந்த 2018ம் ஆண்டு வழங்​கிய தீர்ப்பை எதிர்த்து தாக்​கல் செய்​யப்​பட்ட 66 மறுஆய்வு மனுக்​களை உச்​ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த், நீதிபதி ஜோய்​மால்யா பக்சி அடங்​கிய அமர்வு கடந்த மாதம் 16ம் தேதி விசா​ரித்​தது.

அப்​போது மறுஆய்வு மனுக்​கள் மீதான விசா​ரணை ஏப்​ரல் 7ம் தேதி தொடங்​கும் என அறிவிக்​கப்​பட்​டது. அதன்​படி தீர்ப்பை எதிர்க்​கும் தரப்​பினர் வாதங்​கள் ஏப்​ரல் 7, 8 தேதி​களி​லும், தீர்ப்புக்கு ஆதர​வான மனு​தா​ரர்​களின் வாதங்​கள் ஏப்​ரல் 14, 16 தேதி​களி​லும் கேட்​கப்​படும். பின்​னர் இரு தரப்​பிலும் விளக்க வாதங்​கள் ஏப்​ரல் 21ம் தேதி கேட்​கப்​பட்​டு, ஏப்​ரல் 22ம் தேதி விசாரணை நிறைவு பெறும்.

மறுஆய்வு மனு​தா​ரர்​கள் சார்​பில் ஒருங்​கிணைப்பு வழக்கறிஞராகக் கிருஷ்ணகு​மார் சிங்​கை​யும், மறுஆய்வு மனுக்களை எதிர்ப்​போர் தரப்​பில் ஒருங்​கிணைப்பு வழக்கறிஞராக ஷாஷ்வதி பரி​யும் நியமிக்​கப்​பட்​டனர். இந்த வழக்​கில் நீதி​மன்​றத்​துக்கு உதவ மூத்த வழக்​கறிஞர்​கள் கே.பரமேஷ்வர், சிவம் சிங் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

இந்த மறு ஆய்வு மனுக்​களை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த், நீதிப​தி​கள் பி.வி நாகரத்​தி​னா, எம்.எம். சுந்​தரேஷ், ஏ.அமானுல்​லா, அரவிந்த் குமார், ஏ.ஜி.மசி, பிபி வர்​லே, ஆர் மகாதேவன், ஜோய்​மால்யா பக் ஷி ஆகியோரை கொண்ட 9 நீதிபதி​கள் அடங்​கிய அரசி​யல் சாசன அமர்​வு நாளை முதல்​ விசாரிக்​கிறது.

சபரிமலை வழிபாட்டுக்கு எதிரான தீர்ப்பு - மறுஆய்வு மனுவை நாளை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
ரூ.70 லட்சம் மருந்துகள் திருட்டு: டெல்லியில் 5 பேர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in