

புதுடெல்லி: அரசு மருத்துவனைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டிய மருந்துகளைத் திருடி, சட்டவிரோதமாக வெளிச் சந்தையில் விற்பனை செய்து வந்த 5 பேர் கொண்ட கும்பலை டெல்லி காவல் துறையின் குற்றப்பிரிவு போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
டெல்லி தீஸ் ஹசாரி பகுதியில் உள்ள ‘ஜெய் பாரத் டிரான்ஸ்போர்ட்' வளாகத்தில் டெம்போ மற்றும் சொகுசு காரில் அரசு மருந்துகளை கடத்த முயன்ற மருந்தாளுநர் பினேஷ் குமார் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.