சபரிமலையில் இன்று நடை அடைப்பு

சபரிமலையில் இன்று நடை அடைப்பு
Updated on: 
1 min read

தேனி: சபரிமலை​யில் துலாம் மாதத்​துக்​காக (ஐப்​பசி) கடந்த 17-ம் தேதி மாலை கோயில் நடை திறக்​கப்​பட்​டது. தொடர்ந்து 18-ம் தேதி தொடங்​கிய வழிபாடு இன்று (அக்.22) இரவு வரை நடை​பெற உள்​ளது. பின்பு ஹரிவ​ராசனம் எனும் தாலாட்​டுப் பாடலுடன் நடை அடைக்​கப்​படும். பின்பு நவ.6-ம் தேதி மாலை சித்​திரை ஆட்​டத் திருநாளுக்​காக நடை திறக்​கப்​படும்.

ஒருநாள் வழிபாட்​டுடன் நவ.7-ம் தேதி இரவு நடை அடைக்கப்படும். அதன் பின்பு மண்​டல பூஜைக்​ காக நவ.16-ம் தேதி நடை திறக்​கப்​பட்டு தொடர் வழிபாடு நடை​பெறும் என்று திரு​விதாங்​கூர் தேவசம் போர்டு அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

சபரிமலையில் இன்று நடை அடைப்பு
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in