காதல் பிரச்சினைகளுக்கு தீர்வு தருவதாகக் கூறி ஆன்லைன் ஜோதிடம் மூலம் ரூ.60 லட்சம் கொள்ளை

காதல் பிரச்சினைகளுக்கு தீர்வு தருவதாகக் கூறி ஆன்லைன் ஜோதிடம் மூலம் ரூ.60 லட்சம் கொள்ளை
Updated on
1 min read

அகமதாபாத்: ​ராஜஸ்​தானைச் சேர்ந்த ஆன்​லைன் ஜோதிட மோசடி கும்​பல் சமூக ஊடகங்​களில் அஸ்ட்​ராலஜர் பூஜா கின்னார்மா மற்​றும் ஆச்​சார்யா விகாஸ் சாஸ்​திரி போன்ற பெயர்​களில் போலி கணக்​கு​களை உரு​வாக்​கி​யுள்​ளது.

ஜோதிடர்​கள் மற்​றும் ஆன்​மிக குருக்​கள் போல் நடித்த இவர்​கள், காதல், திரு​மணம், குடும்​பம், தொழில் பிரச்​சினை​களுக்கு தீர்வு காண்​பவர்​களாக செயல்​பட்​டுள்​ளனர்.

குஜ​ராத்​தின் அகம​தா​பாத் நகரைச் சேர்ந்த அப்​பாவி மக்​கள் பலர், காதல் பிரச்​சினை​களுக்கு தீர்வு காண இவர்​களின் வலை​யில் சிக்கியுள்​ளனர். இந்த கும்​பல் பூஜை, சடங்​கு​கள் செய்ய வேண்​டும் எனக் கூறி அப்​பாவி மக்களிடம் டிஜிட்​டல் பரி​மாற்​றம் மூலம் கட்டணம் வசூலித்துள்ளனர்.

பூஜை, சடங்​கு​கள் செய்​யும்​போது, அரை நிர்​வாண கோலத்​தில் இருக்க வேண்​டும் எனக் கூறி அதை புகைப்​படம் எடுத்​துள்​ளனர். பின்​னர் புகைப்​படங்​கள், வீடியோக்​களை மார்​பிங் செய்​து, பொதுவெளி​யில் விடு​வ​தாக கூறி இந்த கும்​பல் தங்​களிடம் சிக்கிய அப்பாவி கும்​பலை மிரட்டி பணம் பறித்​து உள்​ளது.

இது தொடர்​பான புகாரின் பேரில் அகம​தா​பாத் சைபர் பிரிவு போலீஸார் விசா​ரணை நடத்தி ராஜஸ்​தானைச் சேர்ந்த ஒரு மோசடி கும்​பலை பிடித்​தனர். அவர்​கள் அப்​பாவி மக்​களை ஏமாற்றி ரூ.60 லட்​சத்​துக்​கும் மேல் கொள்​ளை​யடித்​தது விசாரணை​யில்​ தெரியவந்​தது.

காதல் பிரச்சினைகளுக்கு தீர்வு தருவதாகக் கூறி ஆன்லைன் ஜோதிடம் மூலம் ரூ.60 லட்சம் கொள்ளை
நல்வழியாளர் பாதுகாப்புச் சட்டம் தெரியுமா?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in