வாழும் கலை அமைப்புக்கு ரூ.5 கோடி அபராதம் ரத்து

வாழும் கலை அமைப்புக்கு ரூ.5 கோடி அபராதம் ரத்து
Updated on
1 min read

புதுடெல்லி: கடந்த 2016-ம் ஆண்டு டெல்லியில் யமுனை நதிக்கரையில் ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பாக உலக கலாச்சார விழா நடத்த திட்டமிடப்பட்டது. இதனால் யமுனை நதி மாசு அடையும் என பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதுகுறித்து மனோஜ் மிஸ்ரா என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், நிகழ்ச்சி தொடங்கும் முன்பு இடைக்கால ‘சுற்றுச்சூழல் இழப்பீட்டு’ அபராதமாக ரூ.5 கோடி செலுத்துமாறு வாழும் கலை அமைப்புக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து, விழா முடிந்த நிலையில், யமுனை கரையோர வெள்ளச் சமவெளியில் சேதம் ஏற்பட்டதாகக் கூறிய தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஏற்கெனவே செலுத்தப்பட்ட ரூ.5 கோடியை பயன்படுத்தி பாதிப்பை சரிசெய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதை எதிர்த்து வாழும் கலை அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த நீதிபதிகள், கலாச்சார விழாவால் யமுனா நதியின் சுற்றுச்சுழலுக்கு சேதம் ஏற்பட்டதற்கு ஆதாரம் இல்லை எனக் கூறி ரூ.5 கோடி அபராதத்தை ரத்து செய்தது.

வாழும் கலை அமைப்புக்கு ரூ.5 கோடி அபராதம் ரத்து
சேலம் அணி ஆறுதல் வெற்றி: TNPL 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in