யு-19 உலக தடகள சாம்பியன்ஷிப்: வெள்ளி வென்றார் ஆஷிஸ் யாதவ்

ஆஷிஸ் யாதவ்

ஆஷிஸ் யாதவ்

Updated on
1 min read

யூஜின்: அமெரிக்​கா​வின் யூஜின் நகரில் யு-19 உலக தடகள சாம்​பியன்​ஷிப் போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவருக்​கான ஈட்டி எறிதலில் இந்​தி​யா​வின் ஆஷிஸ் யாதவ் 74.09 மீட்​டர் தூரம் ஈட்​டியை செலுத்தி 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​கம் வென்றார்.

தென் ஆப்​பிரிக்​கா​வின் யான்​-ஹென்ட்​ரிக் ஹேமன்ஸ் (80.50 மீட்டர்) தங்​கப் பதக்​க​மும், டொமினி​கா​வின் அடிசன் ஜேம்ஸ் (73.89 மீட்​டர்) வெண்​கலப் பதக்​க​மும் வென்​றனர். தமிழகத்தை சேர்ந்த தரணிதரன் 72.35 மீட்​டர் தூரம் எறிந்து 6-வது இடம் பிடித்து ஏமாற்​றம் அளித்​தார்.

யு-19 உலக தடகள சாம்​பியன்​ஷிப் போட்​டி​யின் ஈட்டி எறிதலில் பதக்​கம் வென்ற 2-வது இந்​திய வீரர் என்ற பெரு​மையை பெற்றுள்ளார் 19 வயதான ஆஷிஸ் யாதவ். இதற்கு முன்​னர் ஒலிம்பிக்​கில் இரு முறை பதக்​கம் வென்ற நீரஜ் சோப்ரா கடந்த 2016-ம் ஆண்டு போலந்​தில் நடை​பெற்ற போட்​டி​யில் 86.48 மீட்​டர் தூரம் எறிந்து தங்​கப் பதக்​கம் வென்​றிருந்​தார். உலக ஜூனியர் அரங்​கில் நீரஜ் சோப்ரா எறிந்த தூரமே தற்​போதும் சாதனை​யாக உள்​ளது.

மகளிருக்​கான உயரம் தாண்​டு​தலில் இந்​தி​யா​வின் பூஜா சிங் 1.79 மீட்​டர் உயரம் தாண்டி இறு​திப் போட்​டிக்கு முன்​னேறி​னார். ஆடவருக்​கான நீளம் தாண்​டு​தல் தகுதி சுற்​றில் இந்​தி​யா​வின் ஷாந​வாஸ் கான் (7.73 மீட்​டர்), ஜித்​தின் அர்​ஜுனா (7.57 மீட்​டர்) ஆகியோர் இறுதி சுற்​றுக்​கு தகு​தி பெற்​றனர்​.

<div class="paragraphs"><p>ஆஷிஸ் யாதவ்</p></div>
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சிரோமணி அகாலிதளம் ஆதரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in