ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.82 லட்சம் டிஜிட்டல் மோசடி

ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.82 லட்சம் டிஜிட்டல் மோசடி
Updated on
1 min read

மகபூபாபாத்: தெலங்​கானா மாநிலம் மகபூ​பா​பாத் பகு​தி​யில் வசிக்​கும் ஓய்வு பெற்ற அரசு ஆசிரியரிடம் கடந்த ஏப்​ரல் மாதம் 11-ம் தேதி தொலைபேசி​யில் பேசிய மர்ம நபர்கள், சிபிஐ அதி​காரி​கள் என்​றும், உங்​கள் மீது உங்​களின் ஆதார் எண்​ணின் படி 17 வழக்​கு​கள் தொடுக்​கப்​பட்​டுள்ளன என்​றும், ஆதலால் டிஜிட்​டல் கைது செய்​யப்​பட்​டுள்​ளீர்​கள் எனவும் மிரட்டி உள்​ளனர்.

பின்​னர், கைது நடவடிக்கையில் இருந்து காப்பாற்ற உடனடி​யாக ரூ.75 லட்​சத்தை மும்​பை​யில் உள்ள ஒரு வங்​கிக்கு அனுப்பி வைக்​கும்​படி​யும், இவ்​வழக்கு விசா​ரணை முடிந்த பின்​னர் மே மாதம் 2-ம் தேதி உங்​கள் பணம் மொத்​த​மும் மீண்​டும் உங்​கள் வங்கி கணக்​கிற்கே அனுப்பி வைக்​கப்​படும் எனவும் கூறி உள்​ளனர். அவர்கள் கூறியபடி கடந்த ஏப்​ரல் மாதம் 15-ம் தேதி முதல் படிப்படியாக ரூ.82 லட்​சம் அனுப்பி உள்​ளார்.

பின்னர் ஏமாற்றப்பட்டதை அறிந்து ஆசிரியர் மற்​றும் அவரது மனைவி ஆகிய இரு​வரும் இது தொடர்​பாக மகபூ​பா​பாத் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தனர். அந்த புகாரின் அடிப்​படை​யில் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து குற்​ற​வாளி​களை பிடிக்​க தனிப்படை அமைத்​துள்​ளனர்​.

ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.82 லட்சம் டிஜிட்டல் மோசடி
98 வயது பாஜக மூத்த தலைவரின் காலில் விழுந்து ஆசி பெற்ற பிரதமர் மோடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in