மகளின் விவாகரத்தை மேளதாளம் முழங்க இனிப்புடன் கொண்டாடிய ஓய்வு பெற்ற நீதிபதி

மகளின் விவாகரத்தை மேளதாளம் முழங்க இனிப்புடன் கொண்டாடிய ஓய்வு பெற்ற நீதிபதி
Updated on
1 min read

மீரட்: இந்​தி​யக் குடும்​பங்​களில் விவா கரத்து என்​பது இன்​றும் ஒரு சமூகக் களங்​க​மாகவே பார்க்​கப்​படு​கிறது. இந்த நிலை​யில், ஓய்வு​பெற்ற நீதிபதி ஒரு​வர், தனது மகளின் விவாகரத்தை மேளதாளங்​கள் முழங்க இனிப்பு வழங்கி கொண்​டாடி உள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் மீரட்​டைச் சேர்ந்த ஓய்​வு​பெற்ற நீதிபதியான ஞானேந்​திர சர்​மா​வின் ஒரே மகள் பிரணி​தா. இவருக்​கும் இந்​திய ராணுவத்​தில் மேஜ​ராகப் பணி​யாற்​றும் கவுரவ் அக்​னிஹோத்ரி என்​பவருக்​கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடை​பெற்​றது. இவர்​களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில், புகுந்த வீட்​டில் பிரணிதா தொடர்ந்து கொடுமைப்படுத்​தப்​பட்டு வந்​துள்​ளார்.

இதனால், பிரணிதா விவாகரத்து கோரி குடும்​ப நல நீதிமன்றத்தை அணுகி​னார். நீண்ட சட்​டப் போராட்​டத்​திற்​குப் பிறகு, நீதி​மன்​றம் அவருக்கு விவாகரத்து வழங்கி உத்​தர​விட்​டது. தீர்ப்பு வெளி​யான உடனே, நீதி​மன்ற வளாகத்​திற்கு வெளியே காத்​திருந்த தந்தை ஞானேந்​திர சர்மா மற்​றும் உறவினர்​கள், மேள​தாளங்​கள் முழங்க உற்​சாக​மாகக் கொண்​டாடினர். அங்கிருந்​தவர்​களுக்கு லட்​டு​கள் வழங்கி தங்​கள் மகிழ்ச்​சியை வெளிப்​படுத்​தினர். இந்​தக் கொண்​டாட்​டத்​தின் போது பிரணிதாவின் குடும்​பத்​தினர் கருப்பு நிற டி-சர்ட் அணிந்திருந்தனர்.

அதில் பிரணி​தா​வின் புகைப்​படத்​துடன், "எனது மகளை நேசிக்கிறேன்; அவளே எனது இதயம், எனது ஆன்​மா" என்ற வாசகங்​கள் இடம்​பெற்​றிருந்​தன. பிரணிதா அணிந்​திருந்த உடையில் "எனது குடும்பம் எனது உயிர்" என்ற வாசகம் பொறிக்கப்​பட்​டிருந்​தது. இதுகுறித்து பிரணிதா கூறுகை​யில், “இதுபோன்ற கடின​மான காலங்​களில் தோள் கொடுக்​கும் எனக்கு கிடைத்த போன்ற குடும்​பம் போன்று அனை​வருக்​கும்​ கிடைக்​க வேண்​டுகிறேன்​" என்​றார்​.

மகளின் விவாகரத்தை மேளதாளம் முழங்க இனிப்புடன் கொண்டாடிய ஓய்வு பெற்ற நீதிபதி
தி.நகர் தொகுதியில் தீயாய் வேலை செய்யும் கட்சிகள்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in