சத்​தீஸ்கர்: சிறுவனைக் கொன்று உடல் உறுப்புகளை விற்க முயன்ற உறவினர் கைது

சத்​தீஸ்கர்: சிறுவனைக் கொன்று உடல் உறுப்புகளை விற்க முயன்ற உறவினர் கைது
Updated on: 
1 min read

ஜஷ்பூர்: சத்​தீஸ்கரில் விரைவாகப் பணம் சம்​பாதிக்​கும் நோக்கில் தனது உறவினரின் 4 வயது மக​னைக் கொலை செய்து, உடல் உறுப்புகளை ஆன்​லைன் மூலம் விற்​பனை செய்ய முயன்றவர் கைது செய்​யப்​பட்​டார்.

சத்​தீஸ்​கர் மாநிலம், ஜஷ்​பூர் மாவட்​டம், லோதெனாபாத் மஹுவா கிராமத்​தில் உள்ள வயல்​வெளி​யில், ஒரு பள்​ளத்​தில் சாக்​குப் பையில் அடைக்​கப்​பட்ட நிலை​யில் சிறு​வனின் சடலம் ஒன்று கண்​டெடுக்​கப்​பட்​டது. இதையடுத்து, போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்தி, பசுதேவ் என்​பவரை நேற்​றுமுன்​தினம் கைது செய்​தனர்.

இது​குறித்து, ஜஷ்​பூர் மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் லால் உமேத் சிங் கூறிய​தாவது: சன்னா கிராமத்​தில் குடும்​பத்​துடன் வசித்து வந்த ராம்​ஜீத் என்​பவரது வீட்​டுக்கு, அவரது உறவின​ரான பசுதேவ், அடிக்​கடி வந்து செல்​வது வழக்​கம்.

இந்​நிலை​யில், ராம்​ஜீத்​தின் 4 வயது மகன் திடீரென காணா​மல் போனார். குடும்பத்தினர் சிறு​வனைத் தேடியபோது, மக்​காச்​சோள வயலுக்கு அருகே பள்​ளத்​தில் போர்வை மற்​றும் கம்​பளியால் சுற்றப்​பட்டு, சாக்​குப் பையில் அடைக்​கப்​பட்ட நிலை​யில் சிறுவனின் உடலை ராம்​ஜீத் கண்​டெடுத்​தார்.

இது​தொடர்​பாக, போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில், கொர்​ரா​பாத் கிராமத்​தைச் சேர்ந்த பசுதேவ் பிடிபட்​டார். விசா​ரணை​யின்​போது, பசுதேவ் கூலி வேலை மூலம் கிடைக்​கும் வரு​மானம் போது​மானதாக இல்​லாததால், விரைவாக அதி​கப் பணம் சம்​பாதிக்க ஆசைப்​பட்​டுள்​ளார். இதற்​கான வழிகளை சமூக வலை​தளங்​களில் தேடியபோது், சிறு குழந்​தைகளின் உடல் உறுப்​பு​களை அகற்றி விற்​பனை செய்​ய​லாம் என்ற எண்​ணம் ஏற்​பட்​டுள்​ளது.

இதையடுத்து, கடந்த 5-ம் தேதி ராம்​ஜீத்​தின் மகனை ஆசை வார்த்தை கூறி அழைத்​துச் சென்ற பசுதேவ், சிறு​வனுக்கு மது அருந்​தக் கொடுத்​துள்​ளார்.போதையில் சிறு​வன் தூங்​கிய பிறகு அவனை கொலை செய்து விட்டு, பின்​னர் உடலில் இருந்து சிறுநீரகங்​கள், நுரையீரல் மற்​றும் கண்​களை அகற்றி உள்​ளார். பின்​னர், சிறு​வனை சாக்​குப் பையில் அடைத்து, வயல்​வெளி​யில் உள்ள பள்​ளத்​தில் போட்டு மூடியது தெரிய​வந்​தது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

சத்​தீஸ்கர்: சிறுவனைக் கொன்று உடல் உறுப்புகளை விற்க முயன்ற உறவினர் கைது
‘திமாகி’ நக்சல்களை தோற்கடிக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

X