நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளை இலவசமாக பராமரிக்க தயார்: பிரதாப் சி ரெட்டி தகவல்

பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளதாக அப்போலோ மருத்துவமனை குழும தலைவர் தகவல்
நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளை இலவசமாக பராமரிக்க தயார்: பிரதாப் சி ரெட்டி தகவல்
Updated on: 
1 min read

சித்தூர்: விக்​சித் பாரத் திட்​டத்​தின் ஒரு பகுதி​யாக நாடு முழு​வதும் உள்ள அரசு மருத்​து​வ​மனைகள், ஆரம்ப சுகாதார மையங்​களை இல​வச​மாக பராமரிக்க தயாராக இருப்பதாக அப்​போலோ குழும தலை​வர் பிரதாப் சி ரெட்டி தெரி​வித்​தார்.

அப்​போலோ மருத்​துவ குழு​மத்​தின் தலை​வர் பிரதாப் சி ரெட்டி ஆந்​திர மாநிலம், சித்​தூர் மாவட்​டத்​தில் உள்ள அவரது சொந்த ஊரான அரகொண்​டாவில் நிறு​வப்​பட்​டுள்ள அப்​போலோ மருத்​து​வ​மனை​யின் சாதனையை பாராட்டி பேசினார். தனது சொந்த ஊர் மக்​களுக்​காக கடந்த 2000-ம் ஆண்டு தொடங்​கப்​பட்ட இந்த மருத்​து​வ​மனை​யில் இது​வரை 1,000 பேருக்கு மூட்டு அறுவை சிகிச்​சைகள் செய்து சாதனை படைத்​துள்​ள​தாக அவர் தெரிவித்தார்.

மேலும், அவர் பேசிய​தாவது: இந்த குக்​கிராமத்​தில் பிறந்து வளர்ந்த நான், மக்​களுக்கு மருத்​துவ துறை​யில் சேவை செய்ய வேண்​டும் எனும் உயர்ந்த நோக்​கத்​தில் அப்​போலோ மருத்​து​வ​மனையை தொடங்​கினேன்.

தற்​போது 200-க்​கும் மேற்​பட்ட மருத்​து​வ​மனைகள் உள்​ளன. 7 மருத்​துவ கல்​லூரி​கள், சித்​தூரில் அப்​போலோ பல்​கலைக்​கழகம், செவி​லியர் பயிற்சி கல்​லூரி உள்ளிட்ட​வை​கள் அமைக்​கப்​பட்​டன.

மேலும் சித்​தூர் அரசு மருத்​து​வ​மனையை 33 ஆண்​டுகள் ஒப்பந்தத்​துக்கு எடுத்து, தற்​போது 650 படுக்கை வசதி கொண்ட அதிநவீன மருத்​து​வ​மனையாக இது செயல்​பட்டு வரு​கிறது. முதல்வர் சந்​திர​பாபு நாயுடு இதற்கு கடந்த 10 ஆண்​டுகளுக்கு முன் அனுமதி வழங்​கினார். இங்கு இல​வச​மாக மக்​கள் மருத்​துவ வசதியை பெற்று வரு​கின்​றனர். ஆரோக்​கிய​மான இந்​தியா என்பது பெரு நகரங்​களில் மட்​டுமல்​லாது குக்​கிராமங்​களி​லும் கட்டமைக்​கப்​பட வேண்​டும் என்​பதே என் கருத்து.

சுகாதா​ர​மான இந்​தி​யா​வுக்​காக விக்​சித் பாரத் திட்​டத்​தின் கீழ் அப்​போலோ தனது சேவையை நாடு முழு​வதும் அமல்​படுத்த நினைக்​கிறது. இது தொடர்​பாக நான் பிரதமர் நரேந்​திர மோடியை சந்​தித்து 2 திட்​டங்​களை முன்வைத்​தேன்.

அதில் முதலா​வது, வெளி​நாட்​ட​வர்​கள், அல்​லது வெளி​நாடு வாழ் இந்தியர்​கள், நம் நாட்​டுக்கு வரும்​போது, மருத்​துவ பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை போன்​றவற்றை அப்​போலோவில் எடுத்து கொள்​ளும் பட்சத்​தில் அவர்​களுக்கு விரைந்து மருத்​துவ சேவையை செய்து தரு​வோம். அடுத்​த​தாக, விக்​சித் பாரத்திட்​டத்​தின் ஒரு பகுதி​யாக நாடு முழு​வதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்​களை அப்​போலோவுக்கு சில ஆண்​டுகள் ஒப்​பந்த அடிப்​படை​யில் வழங்கினால், அவற்றை நவீனப்​படுத்தி, மக்​களுக்கு இல​வச​மாக சிறந்த மருத்​துவ சேவையை வழங்​கு​வோம். இவ்​வாறு அவர் பேசினார்.

நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளை இலவசமாக பராமரிக்க தயார்: பிரதாப் சி ரெட்டி தகவல்
ரூ.634 கோடி ஊழல் புகார் தொடர்பாக கே.என்.நேரு தொடர்​புடைய 25 இடங்களில் திடீர் சோதனை

X