ஜூன் 18-ல் மாநிலங்களவை தேர்தல்: பாஜக கூட்டணி, எதிர்க்கட்சிகளுக்கு தலா 2 எம்.பி.க்கள் அதிகரிக்க வாய்ப்பு

ஜூன் 18-ல் மாநிலங்களவை தேர்தல்: பாஜக கூட்டணி, எதிர்க்கட்சிகளுக்கு தலா 2 எம்.பி.க்கள் அதிகரிக்க வாய்ப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: ​வரும் மாநிலங்​களவை தேர்​தலுக்கு பிறகு, என்​டிஏ மற்றும் எதிர்​கட்​சிகளுக்கு தலா 2 எம்​.பி.க்​கள் கூடு​தலாக கிடைக்க வாய்ப்​புள்​ளது.

ஆந்​தி​ரா, கர்​நாட​கா, குஜ​ராத் உள்​ளிட்ட 10 மாநிலங்​களில் காலியாக உள்ள 24 மாநிலங்​களவை எம்​.பி. பதவி​களுக்கு வரும் ஜூன் 18-ம் தேதி தேர்​தல் நடை​பெற உள்​ளது. இத்​துடன் மகாராஷ்டிரா மற்​றும் தமிழ்​நாட்​டில் தலா ஒரு எம்​.பி. பதவிக்கான இடைத்​தேர்​தல் நடை​பெறுகிறது. இந்த 24 எம்​.பி. பதவி​களில் பாஜக தலைமையிலான கூட்டணி (என்​டிஏ) வசம் 15 உள்​ளன.

இதில் பாஜக​வில் மட்​டும் 12 பேரின் பதவிக் காலம் முடிகிறது. இதுபோல் எதிர்க்​கட்​சிகள் கூட்​ட​ணி​யில் காங்​கிரஸின் 4 எம்.பிக்கள், ஜேஎம்​எம் கட்​சி​யின் ஓர் எம்​.பி. என 5 பேரின் பதவிக்​காலம் முடிகிறது. இது தவிர ஒய்​எஸ்​ஆர் காங்​கிரஸின் 3 எம்.பி.க்கள் உள்​ளிட்ட பிற கட்சி எம்​.பி.க்​களின் பதவிக் கால​மும் முடிகிறது.

இந்த தேர்​தலில் தற்​போதுள்ள எம்​எல்​ஏக்​கள் எண்​ணிக்கை அடிப்​படை​யில் என்​டிஏ 17, எதிர்க்​கட்​சிகள் 7 இடங்​களை கைப்​பற்​ற வாய்ப்பு உள்ளது. இதனால் என்​டிஏ கூட்​ட​ணிக்கு 2 இடம் கூடுதலாக கிடைக்கும். காங்​கிரஸ் கட்​சி, கர்​நாட​கா​வில் வலுவான நிலை​யில் உள்​ளது. எனினும், குஜ​ராத்​தில் இருந்து மாநிலங்​களவை​யில் அக்​கட்​சி​யின் பிர​தி​நி​தித்​து​வமே முடிவுக்கு வரும் அபா​யம் உள்​ளது. ஒய்​எஸ்​ஆர் காங்​கிரஸ் தனது 3 எம்.பி.க்களை​யும் இழக்​கும் வாய்ப்​புள்​ளது.

தமிழ்​நாட்​டில் அதி​முக தலை​வர் சி.​வி.சண்​முகம் எம்​எல்​ஏ​வாக தேர்​வான​தால் அவரது எம்​.பி. பதவி காலி​யானது. இந்​த முறை மாநிலங்​கள​வைத் தேர்​தலில், தமிழ்​நாட்​டுக்​கான இடைத் ​தேர்தலே அனை​வ​ராலும் அதி​கம் பேசப்​படு​வ​தாக உள்​ளது. ஏனெனில், நடிக​ராக இருந்து அரசி​யல்​வா​தி​யான முதல்​வர் விஜய்யின் கட்​சி​யான தவெக-வுக்கு வெற்றி வாய்ப்பு உறு​தி​யாக உள்​ளது.

எனினும் அக்​கட்சி மாநிலங்​களவை​யில் முதன்​முறை​யாக அடியெடுத்து வைக்​கு​மா ? அல்​லது அந்த இடத்​தைத் தனது கூட்டணிக் கட்​சி​யான காங்​கிரஸுக்கு விட்​டுக்​கொடுக்​கு​மா ? என்ற கேள்வி எழுந்​துள்​ளது. இது இடைத்​தேர்​தல் என்​ப​தால் அதை, காங்​கிரஸுக்கு வழங்கி விடலாம் என முதல்​வர் விஜய் கருதுவதாக தகவல்​கள் வெளி​யாகின்​றன.

ஜூன் 18-ல் மாநிலங்களவை தேர்தல்: பாஜக கூட்டணி, எதிர்க்கட்சிகளுக்கு தலா 2 எம்.பி.க்கள் அதிகரிக்க வாய்ப்பு
ஆந்திராவில் 4 விமான நிலையங்களில் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் விரைவில் விநியோகம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in