ரயில் திட்டங்கள் நிறுத்தம்: ஆப்பிள் விவசாயிகள் மகிழ்ச்சி

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

ஸ்ரீநகர்: ஸ்ரீநகருக்கு தெற்கே 40 கி.மீ. தெலைவில் அமைந்துள்ள சோபியான் மாவட்ட நீல் திரிசில் செக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஷபீர் அகமது கூறுகையில், “எங்களின் குடும்ப வாழ்வாதாரத்தை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் ஒற்றை அறிவிப்பு காப்பாற்றியுள்ளது.

45 சிறு விவசாய குடும்பங்களை கொண்ட இந்த கிராமத்தில் ஏற்கெனவே ரயில்வே பாதை அமைப்பதற்கான நில அளவீடு பணிகள் முடிக்கப்பட்டு விட்டன காக்கபோரா-ஷோபியான் இடையிலான ரயில் பாதைக்காக 20 குடும்பங்களின் நிலங்களை கையகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக, எங்கள் ஆப்பிள் தோட்டங்களில் சிறிய தூண்கள் நடப்பட்டிருந்தன.

சுமார் 7 லட்சம் ஆப்பிள் மரங்களை வெட்ட வேண்டிய சூழல் இருந்தது. இந்த நிலையில் ரயில் திட்டம் நிறுத்தம் என, மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு ஈகைத் திருநாள் போன்ற மகிழ்ச்சியை எங்களுக்கு தந்துள்ளது” என்றார்.

இந்தியாவின் மொத்த ஆப்பிள் உற்பத்தியில் காஷ்மீர் 75 சதவீதப் பங்களிப்பை வழங்குகிறது. இது, ஜிடிபியில் 8 சதவீதம் ஆகும். சுமார் 35 லட்சம் மக்கள் இத்தொழிலை நம்பியுள்ளனர்.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
பட்ஜெட் விலையில் சாம்சங் கேலக்சி ஏ07 ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in