பட்ஜெட் விலையில் சாம்சங் கேலக்சி ஏ07 ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சாம்சங் கேலக்சி ஏ07 ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்சி ஏ07 ஸ்மார்ட்போன்

Updated on
1 min read

சென்னை: பட்ஜெட் விலையில் சாம்சங் கேலக்சி ஏ07 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம்.

இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். அந்த வகையில் அதன் ‘ஏ’ போன் வரிசையில் புது வரவாக கேலக்சி ஏ07 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் விலையில் போன்களை எதிர்பார்க்கும் பயனர்களை டார்கெட் செய்து இந்த போனை சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் இந்த போன் சர்வதேச சந்தையில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்சி ஏ07 ஸ்மார்ட்போன்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  • 6.7 இன்ச் எல்சிடி டிஸ்பிளே

  • மீடியாடெக் டிரான்சிட்டி 6300 சிப்செட்

  • ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்

  • 4ஜிபி / 6ஜிபி ரேம்

  • 64ஜிபி / 128ஜிபி ஸ்டோரேஜ்

  • 50 + 2 மெகாபிக்சல் என இரண்டு கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது

  • 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா

  • மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது

  • 6,000mAh பேட்டரி

  • 25 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்

  • 5ஜி நெட்வொர்க்

  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்

  • இந்த போனின் விலை ரூ.15,999 முதல் தொடங்குகிறது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in