நேஹா போராவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ராகுல்: காங்கிரஸின் என்எஸ்யுஐ மாணவர் அமைப்பினர் அதிருப்தி

நேஹா போராவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ராகுல்: காங்கிரஸின் என்எஸ்யுஐ மாணவர் அமைப்பினர் அதிருப்தி
Updated on: 
1 min read

புதுடெல்லி: எஸ்​ஐஆர் நடவடிக்​கை​யில் முறை​கேடு​கள் நடந்ததாகக் கூறி, தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பதவி விலக வலி​யுறுத்தி காங்​கிரஸ் உள்ளிட்ட இண்​டியா கூட்​ட​ணிக் கட்​சிகள், கரப்​பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) மற்​றும் அகில இந்​திய மாணவர் சங்​கம் (ஏஐஎஸ்ஏ) உள்​ளிட்ட மாணவர் அமைப்​பு​கள் டெல்​லி​யில் தொடர் போராட்​டத்​தில் ஈடுபட்டு வரு​கின்​றன.

இதில், சிபிஐ (எம்எல்) கட்​சி​யின் மாணவர் அமைப்​பான ஏஐஎஸ்ஏ சார்​பில் அதன் தேசிய தலை​வர் நேஹா போரா அதிக கவனத்​தைப் பெற்று வரு​கிறார். மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வ​ரான ராகுல் காந்தி போராட்​டம் தொடர்​பான தனது நிகழ்​வு​களில் நேஹா போரா​வுக்கு முக்​கி​யத்​து​வம் அளித்து வரு​கிறார் என்றும் அதே​போல காங்​கிரஸ் பொதுச் செய​லா​ளர் பிரி​யங்கா காந்​தி​யும் போராட்​டத்​தின்​போது நேஹாவை தனக்கு அருகே வைத்​துக் கொள்​கிறார் என்றும் காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடந்த 12-ம் தேதி நடந்த பேரணிக்கு தலைமை தாங்​கிய இரு பெண்​களில் ஒரு​வர் பிரி​யங்கா காந்​தி, மற்​றொரு​வர் நேஹா போரா. போராட்​டத்​தின் முன்​னணித் தலை​வர்​கள் பயணித்த பேருந்​தி​லும், பின்​னர் ராகுல் காந்​தி​யும் சில முக்​கிய நபர்​களும் நின்​றிருந்த வாக​னத்​தி​லும் நேஹா போரா காணப்​பட்​டார்.

போராட்​டக்​களத்​தில் காங்​கிரஸின் மாணவர் அமைப்​பான இந்​திய தேசிய மாணவர் சங்​கத்​தின் (என்​எஸ்​யுஐ) தேசி​யத் தலை​வர் வினோத் ஜாகர் உள்​ளிட்ட முக்​கிய நிர்​வாகி​கள் இருந்​தா​லும், அவர்​கள் முன்​வரிசை​யில் நிறுத்​தப்​பட​வில்​லை. எதிர்க்​கட்​சித் தலை​வர்​களின் செய்​தியாளர் கூட்​டத்​தி​லும் அவர்களுக்கு இணை​யாக நேஹாவுக்​கும் பேசும் வாய்ப்பு அளிக்கப்​படு​கிறது.

இது​போன்ற நடவடிக்கை என்​எஸ்​யுஐ அமைப்​பினருக்கு கடும் அதிருப்​தியை ஏற்​படுத்தி உள்​ளது. அந்த அமைப்​பினர் சார்​பில் நடத்​தப்​படும் வாட்​ஸ்​அப் குழுக்​களில் பலரும் இதை குறிப்​பிட்டு புகார் தெரி​வித்​த​தாக கூறப்​படு​கிறது.

நேஹா போராவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ராகுல்: காங்கிரஸின் என்எஸ்யுஐ மாணவர் அமைப்பினர் அதிருப்தி
போராடும் பெண்களிடம் போலீஸார் அத்துமீறல்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in