போராடும் பெண்களிடம் போலீஸார் அத்துமீறல்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

Updated on: 
1 min read

புதுடெல்லி: தலைமை தேர்​தல் ஆணை​யரை பதவி நீக்​கம் செய்ய வலி​யுறுத்​தி, டெல்​லி​யில் நடை​பெற்ற போராட்​டத்​தில், மாணவர்​கள் மீது போலீ​ஸார் அடக்​கு​முறையை கையாள்​வ​தாக குற்றச்சாட்டு எழுந்​தது.

இதுதொடர்​பாக மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் தனது எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “ஜன​நாயகத்​துக்​காக குரல் எழுப்​பும் மாணவர்​கள் மற்​றும் பெண்​கள் மீது டெல்லி போலீ​ஸார் நடத்​தும் வன்​முறை​கள் எல்​லை​யைத் தாண்​டி​விட்​டன. பாலியல் துன்​புறுத்​தல், ஆடைகளைப் பிடித்து இழுத்​தல் உள்​ளிட்ட அத்துமீறிய செயல்​களில் ஈடு​படு​கின்​றனர்.

போராட்​டக்​காரர்​களின் குரல்​களை ஒடுக்​கு​வதற்​கான சதி​யின் ஒரு பகு​தி​தான் இவை அனைத்​தும். மீண்​டும் யாரும் கேள்வி கேட்​கத் துணி​யாத வகை​யில், மக்​களை அச்​சுறுத்​தி, மிக மோச​மாக அவமானப்​படுத்​து​வதே இதன் நோக்​கம்.

அதிகாரம் தங்கள் கைகளிலிருந்து நழுவும் நாளில், தங்களது தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு முடிவு வந்துவிடும் என்பது பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷாவுக்குத் தெரியும். அந்த அச்சம்தான் போலீஸார் வழியாக வெளிப்பட்டு, நாட்டின் இளைஞர்கள், பெண்கள் மீது வன்முறையாகக் கட்டவிழ்த்து விடப்படுகிறது” என்று கூறியுள்ளார்.” என்று கூறி​யுள்​ளார்.

<div class="paragraphs"><p>ராகுல் காந்தி</p></div>
ஜனவரி மாதம் ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைனில் நாளை டிக்கெட்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in