3 மாதங்களில் வணிக எல்பிஜி விலை 81 சதவீதம் உயர்வு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

Updated on
1 min read

புதுடெல்லி: கடந்த 3 மாதங்​களில் வணிக சமையல் காஸ் விலை 81 சதவீதம் உயர்ந்​திருக்​கிறது என்று மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி குற்​றம் சாட்டி உள்​ளார்.

இதுதொடர்​பாக சமூக வலை​தளத்​தில் அவர் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: தேர்​தலுக்​குப் பிறகு விலை​வாசி உயரும் என்று ஏற்​கெனவே நான் சொல்​லி​யிருந்​தேன்.

இன்​றைய தினம் வணிக சமையல் காஸ் சிலிண்​டர் ரூ.993 விலை உயர்த்​தப்​பட்டு உள்​ளது. ஒரே நாளில் கணிச​மாக விலை உயர்த்​தப்​பட்டு இருக்​கிறது. இது​தான் தேர்​தல் கட்​ட​ணம். கடந்த பிப்​ர​வரி முதல் ஏப்​ரல் வரை 3 மாதங்​களில் மட்​டும் வணிக எல்​பிஜி விலை ரூ.1,380 விலை உயர்த்​தப்​பட்டு உள்​ளது. அதாவது 81 சதவீதம் வரை விலை உயர்ந்​திருக்​கிறது.

வணிக எல்​பிஜி விலை உயர்​வால் டீ கடை, ஓட்​டல், பேக்​கரி, இனிப்​புக் கடைகள் கடுமை​யாகப் பாதிக்​கப்​படும். இதனால் பொது​மக்​களும் பாதிக்​கப்​படு​வார்​கள். முதல்​கட்​ட​மாக எல்​பிஜி காஸ் விலை உயர்த்​தப்​பட்டு உள்​ளது. அடுத்த கட்​ட​மாக சமையல் காஸ், பெட்​ரோல், டீசல் விலை உயர்த்​தப்​படும். இவ்​வாறு ராகுல் காந்​தி குற்​றம்​ சாட்​டி உள்​ளார்​.

<div class="paragraphs"><p>ராகுல் காந்தி</p></div>
உ.பி. நீதிபதியிடம் ரூ.24 லட்சம் மோசடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in