ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்தால் போராட்டம் வாபஸ்: ராகுல் காந்தி

பிரதமர் மோடியிடம் சொல்லுங்கள் என வணிகர்களுக்கு பதில்
ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்தால் போராட்டம் வாபஸ்: ராகுல் காந்தி
Updated on: 
1 min read

புதுடெல்லி: தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்​கம் செய்ய மோடி​யிடம் நீங்​கள் சொல்​லுங்​கள், 30 வினாடிகளில் போராட்​டத்தை வாபஸ் பெற்​று​விடு​கிறோம் என வணிகர்​களிடம் ராகுல் காந்தி தெரி​வித்​துள்​ளார்.

வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் தீவிர திருத்தப் பணியில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, டெல்​லி​யில் நவம்​பர் 1-ம் தேதி இண்​டியா கூட்​டணி சார்​பில் வாக்​குத் திருட்​டுக்கு எதிரான பேரணி நடை​பெற உள்​ளது. பண்​டிகைக் காலம் என்​ப​தால் இதனை ஒத்திவைக்குமாறு வணிகர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலை​யில் இது​தொடர்​பாக டெல்லி தொழில் மற்​றும் வர்த்தக சபை தலை​வர் பிரிஜேஷ் கோயல் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்​திக்கு எழுதிய கடிதத்​தில், ”தீபாவளி பண்​டிகைக் காலத்​தில் ராம்​லீலா மைதானத்​தைச் சுற்றியுள்ள மொத்த மற்​றும் சில்​லறை வர்த்​தகம் கடுமையாகப் பாதிக்​கப்​படும்.

தங்​கம், வெள்ளி, எலக்ட்​ரானிக்ஸ், உடைகள், பாத்திரங்​கள் என ரூ.25,000 கோடிக்கு வணிகம் நடை​பெறும். எனவே, நவம்​பர் 10-க்​குப் பிறகு பேரணியை வைக்க பரிசீலிக்க வேண்​டும்” என்று கேட்​டுக்​கொண்​டார்.

இதுகுறித்து எக்ஸ் பக்​கத்​தில் ராகுல் கூறியுள்​ள​தாவது: டெல்லியில் உள்ள ஒவ்​வொரு வணிகர் மீதும் நாங்​கள் அன்​பும், மரியாதையும் வைத்​துள்​ளோம்.

உங்​கள் குரலுக்கு செவிமடுக்கிறோம். அரசாங்​கம் மெட்​ரோவை மூடியது, நமது சாலைகளை சீல் வைத்​தது, நமது தலைநகரையே பூட்​டியது. உங்கள் வாக்​கு​கள் திருடப்​பட்​டால், நாளை உங்​கள் கடை, சேமிப்பு, உங்​கள் குழந்​தைகளின் எதிர்​காலம் என எது​வுமே பாதுகாப்​பாக இருக்​காது என்​பதை புரிந்து கொள்ள வேண்​டும்.

நீங்​கள் என்​னிடம் கோரிக்கை விடுப்​ப​தற்கு பதிலாக, வாக்கு திருட்டு விவகாரத்​தில் நான்​காவது குற்​றவாளியான தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமாரை பத​வி​யி​லிருந்து நீக்​குமாறு பிரதமர் நரேந்​திர மோடி​யிடம் வலியுறுத்த வேண்​டும். அதை அவர் ஏற்​றுக்​கொண்​டால் இந்த போராட்​டங்​கள் வெறும் 30 வினாடிகளில் முடிவுக்கு வந்​து​விடும். இவ்​வாறு ராகுல் கூறியுள்ளார்.

ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்தால் போராட்டம் வாபஸ்: ராகுல் காந்தி
இஸ்ரேல் தேர்தல் 2026: நெதன்யாகு ஆட்சி வீழ்ந்தால் ஏற்படும் அதிர்வுகள் என்னென்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in