“ராகுல் என் கையைப் பிடித்து கீழே தள்ளிவிட்டார்” - கர்ப்பிணி நிருபர் பரபரப்பு குற்றச்சாட்டு

“ராகுல் என் கையைப் பிடித்து கீழே தள்ளிவிட்டார்” - கர்ப்பிணி நிருபர் பரபரப்பு குற்றச்சாட்டு
Updated on: 
1 min read

புதுடெல்லி: தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமாருக்கு எதி​ரான போராட்​டத்​தின் போது, உச்​சநீ​தி​மன்ற வளாகத்​தில் ராகுல் காந்தி தன் கையைப் பிடித்து இழுத்​ததுடன், ஆக்ரோஷமாக கீழே தள்ளி விட்​ட​தாக மூன்று மாத கர்ப்பிணியான ரிச்சா பராஷர் என்​கிற பத்​திரி​கை​யாளர் குற்​றம் சாட்​டி​யுள்​ளார்.

தாக்​குதலுக்கு ஆளான​தாக கூறி, டெல்​லி​யில் உள்ள மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்ள அவரை, பாஜக செய்​தித் தொடர்​பாளர் பிரதீப் பண்​டாரி உள்பட கட்​சி​யின் தலை​வர்​கள் பலரும் நேரில் சந்​தித்து நலம் விசா​ரித்​தனர். அப்​போது, ரிச்சா பராஷர் மருத்​து​வ​மனை படுக்​கை​யில் இருந்​த​படி தனி​யார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: ராகுலிடம் கருத்து கேட்க மைக்கை நீட்​டிய​போது அவர் அதை அகற்​று​மாறு சைகை செய்​தார்.

நான் அப்​படியே செய்​தேன். ஆனால் மற்​றவர்​கள் தொடர்ந்து மைக்கை நீட்​டு​வதைப் பார்த்​த​தால், நானும் மீண்​டும் மைக்கை நீட்​டினேன். அப்​போது ராகுல் காந்தி மிக​வும் ஆக்​ரோஷ​மான முகபாவனை​யுடன் முன்னே வந்​தார். திடீரென என் கையைப் பிடித்து பலமாக இழுத்​தார்.

அதனால் நான் கீழே விழுந்​து, என் முழங்​கால்​களும் வயிறும் தரை​யில் மோதி காயமடைந்​தன. எனது ஒளிப்​ப​தி​வாளரை​யும் ராகுல் தள்​ளிய​தால், அவர் என் மேல் விழுந்​தார். அதன்​பின் ஏற்​பட்ட குழப்​பத்​தில் மேலும் 4 பேர் என் மீது விழுந்​தனர். இவ்​வாறு அவர் கூறி​னார்.

காங்​கிரஸ் திட்​ட​வட்​ட​மாக மறுப்பு

இந்​தக் குற்​றச்​சாட்டை காங்​கிரஸ் முற்​றி​லும் மறுத்​து, இது பாஜக உரு​வாக்​கிய பிர​ச்சா​ரக் கதையென தெரி​வித்​துள்​ளது. காங்​கிரஸ் நிர்​வாகி​கள் பலரும் சம்​பவம் தொடர்​பான வீடியோக்​களை சமூக வலைத்​தளங்​களில் பகிர்ந்​து, அவற்​றில் எதி​லும் ராகுல் கர்ப்​பிணி செய்​தி​யாளரைத் தள்​ளிய​து காணப்​பட​வில்லை என்று குறிப்பிட்டு வரு​கின்​றனர்.

பாஜக செய்​தித் தொடர்​பாளர் பிரதீப் பண்டாரி, “ஆணா​திக்​கத்தை உடைப்​போம்’ என்று பேசும் ராகுல், ஒரு ரவுடியைப் போல நடந்​து​கொண்​டார். இது கண்டிக்கத்தக்கது” என்றார்​.

“ராகுல் என் கையைப் பிடித்து கீழே தள்ளிவிட்டார்” - கர்ப்பிணி நிருபர் பரபரப்பு குற்றச்சாட்டு
மருத்துவமனைகளில் சிகிச்சை கட்டணங்களை காட்சிப்படுத்த உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in