மருத்துவமனைகளில் சிகிச்சை கட்டணங்களை காட்சிப்படுத்த உத்தரவு

மருத்துவமனைகளில் சிகிச்சை கட்டணங்களை காட்சிப்படுத்த உத்தரவு
Updated on: 
1 min read

சென்னை: மருத்துவமனைகளில் சிகிச்சை கட்​ட​ணங்​களை வெளிப்​படை​யாக காட்​சிப்​படுத்த வேண்​டும் என்று மத்​திய சுகா​தா​ரத் துறை தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக மத்​திய சுகா​தா​ரத் ​துறை செயலர் புன்ய சலிலா ஸ்ரீவஸ்​த​வா, அனைத்து மாநில தலைமை செயலர்​களுக்கு எழு​தி​யுள்ள கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: மருத்​து​வ​மனை​களில் வெளிப்​படைத் தன்மை கொண்டு வந்​தால், நோ​யாளி​கள் மற்​றும் அவர்​களது குடும்பத்​தினர் சிகிச்​சைக்​கான செலவை முன்​கூடியே திட்​ட​மிடு​வார்​கள்.

கட்​ட​ணம் தொடர்​பான தேவையற்ற குழப்​பங்ளை தவிர்க்க முடி​யும். மருத்​துவ சேவை​கள் மீது பொது​ மக்​களின் நம்​பிக்​கையை அதி​கரிக்​கும். அதனால், மருத்​துவ நிறு​வனங்​கள் சட்​டம் அமலில் உள்ள மாநிலங்​களில், ஒவ்​வொரு சேவைக்​கான கட்டண விபரங்​கள் ஆங்​கிலம் மற்​றும் அந்​தந்த உள்​ளூர் மொழி​யில் பொது​மக்​கள் எளி​தில் பார்க்​கும் இடத்​தில் காட்​சிப்​படுத்த வேண்​டும்.

மாநில பட்​டியலில் சுகா​தா​ரம் இருப்​ப​தால், இவை முறை​யாக பின்​பற்​றப்​படு​கிறதா என்​பதை தலை​மைச் செயலர்​கள் தனிப்​பட்ட முறை​யில் கண்​காணித்து உறுதி செய்ய வேண்​டும். அதே​போல், மருத்​துவ சுற்​றுலா​வாக வரும் வெளி​நாட்டு நோ​யாளி​களுக்கு வழங்​கப்​படும் சிகிச்சை கட்​ட​ணங்​களை​யும் வெளிப்​படை​யாக காட்​சிப்​படுத்த வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

மருத்துவமனைகளில் சிகிச்சை கட்டணங்களை காட்சிப்படுத்த உத்தரவு
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு: நதிநீர் இணைப்பு பற்றி பேச்சு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in