“காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் தொழில் தொடங்க ரூ.50,000” - அசாமில் ராகுல் வாக்குறுதி

அசாம் மாநிலத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரத்துக்காக வந்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கோலாகாட் பகுதியில் தனக்கு வரவேற்பு அளித்த பழங்குடியினருடன் கலந்துரையாடினார்.

அசாம் மாநிலத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரத்துக்காக வந்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கோலாகாட் பகுதியில் தனக்கு வரவேற்பு அளித்த பழங்குடியினருடன் கலந்துரையாடினார்.

Updated on
1 min read

விஸ்வநாத்: அசாம் மாநிலத்​தின் விஸ்​வ​நாத் நகரில் நடை​பெற்ற காங்​கிரஸ் தேர்​தல் பிரச்​சார கூட்​டத்​தில் மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி பங்​கேற்று பேசி​ய​தாவது: அசாம் மாநில நலன், தேயிலை தொழிலா​ளர்​களுக்கு அதிக ஊதி​யம், மக்​களுக்கு எஸ்டி அந்​தஸ்து போன்ற வாக்​குறு​தி​களை பாஜக அரசு நிறைவேற்​ற​வில்​லை.

முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மற்​றும் பாஜக​வினர் மக்​களை பிரித்து ஊழலில் ஈடு​படு​கின்​றனர். இந்​தி​யா​வில் அதி​க​மாக ஊழல் செய்​யும் முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்​மா​தான். அவர் பொறுப்​பற்ற கருத்​துக்​களை தெரி​வித்து மக்​களிடையே பிரி​வினையை ஏற்​படுத்தி வரு​கிறார்.

அசாம் தலை​வர்​கள் ஸ்ரீமந்த சங்​கர்​தேவ், கோபி​நாத் பர்​தோலாய், பூபென் ஹசா​ரி​கா, அசன் பிர், ஜுபின் கார்க் போன்ற தலை​வர்​கள் எல்​லாம் மக்​களிடையே வெறுப்பை பரப்​ப​வில்​லை. அவர்​கள் மக்​களை ஒன்​றிணைக்க பணி​யாற்​றினர்.

காங்​கிரஸ் கட்சி ஆட்​சிக்கு வந்​தால் மக்​களை ஒன்​றிணைத்து மாநிலத்​தில் வளர்ச்​சியை ஏற்​படுத்​தும். காங்​கிரஸ் ஆட்​சிக்கு வந்​தால் 6 பிரி​வினருக்கு எஸ்​.டி. அந்​தஸ்து வழங்​கும். தேயிலை தொழிலா​ளர்​களுக்கு ரூ.450 தினக்​கூலி வழங்​கு​வோம். பெண்​களின் வங்கி கணக்​கில் மாதந்​தோறும் நிதி​யுதவி அளிக்​கப்​படும்.

பெண்​கள் தொழில் தொடங்க ரூ.50,000 வழங்​கு​வோம். அனைத்து குடும்​பத்​துக்​கும் ரூ.25 லட்​சம் மதிப்​பில் சுகா​தார காப்​பீடு வழங்​கு​வோம். மு​தி​யோர்​களுக்கு மாதந்​தோறும் ரூ.1,250 உதவித் தொகை வழங்​கு​வோம்​.இவ்​வாறு ராகுல்​ கூறி​னார்​.

<div class="paragraphs"><p>அசாம் மாநிலத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரத்துக்காக வந்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கோலாகாட் பகுதியில் தனக்கு வரவேற்பு அளித்த பழங்குடியினருடன் கலந்துரையாடினார்.</p></div>
திருச்சூரில் பரிசுப் பொருட்கள்: பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in