திருச்சூரில் பரிசுப் பொருட்கள்: பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு

திருச்சூரில் பரிசுப் பொருட்கள்: பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு
Updated on
1 min read

திருச்சூர்: கேரளாவில் வரும் 9-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திருச்சூரில் பாஜக வேட்பாளராக பத்மஜா வேணுகோபால் என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் திருச்சூரின் ஒலாரி பகுதியில் உள்ள பார்த்தசாரதி கோயில் அருகே வாக்காளர்களை கவர ரூ.900 மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் பரிசாக வழங்கப்படுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பறக்கும் படையினர் அங்கு விரைந்து சென்று பரிசு பொருட்களை பறிமுதல் செய்தனர். அதற்குள் அப்பகுதி வாக்காளர்கள் 100 பேருக்கு மேல் பரிசு பொருட்களை வாங்கி சென்றுவிட்டனர்.

இந்த பரிசு பொருட்கள் உள்ளூர் பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன் என்பவரின் ஏற்பாட்டின் கீ்ழ் வழங்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீஸார் பிஎன்எஸ் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

திருச்சூரில் பரிசுப் பொருட்கள்: பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு
மாட்டிறைச்சி சாப்பிடுவதாக கூறியதால் சர்ச்சையில் சிக்கிய அசாம் வேட்பாளர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in