

’சனாதன இந்தியாவின் எதிரி ராவணன்’ என்ற தலைப்பிலான போஸ்டர்கள்.
லக்னோ: தசரா பண்டிகையை முன்னிட்டு உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் பல சந்திப்புகளில் ‘சனாதன இந்தியாவின் எதிரி ராவணன்’ என்ற தலைப்பிலான போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இந்திய,் சர்வதேசப் பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்தப் போஸ்டர்களை சனாதன் ரக் ஷா சங்கதன் என்ற அமைப்பு ஒட்டியதாகக் கூறப்படுகிறது.
அவற்றில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் உள்ளிட்டோர் பத்து தலை ராவணனின் முகங்களுடன் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், வங்கதேசத்தின் முகமது யூனுஸ், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளான அதீக் அகமது, முக்தார் அன்சாரி (இவர்கள் இருவர் மீதும் பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தன) மற்றும் பலர் அந்தப் போஸ்டரில் இடம்பெற்றிருந்தனர்.
அரசியல் தலைவர்கள், வெளிநாட்டுப் பிரபலங்கள் மற்றும் குற்ற வழக்குகளுடன் தொடர்புடையவர்களை, இந்தியாவின் நலனுக்கு எதிரானவர்கள் என்று காட்டும் வகையில் இந்தப் போஸ்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன.