அதிகாரியைத் தற்கொலைக்குத் தூண்டியதாகப் புகார்: பஞ்சாப் அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர் ராஜினாமா

அதிகாரியைத் தற்கொலைக்குத் தூண்டியதாகப் புகார்: பஞ்சாப் அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர் ராஜினாமா
Updated on
1 min read

சண்டிகர்: பஞ்​சாபில் ஒரு அரசு அதி​காரியைத் தற்​கொலைக்​குத் தூண்​டிய​தாக புகார் எழுந்​ததையடுத்​து, அமைச்​சர் லால்​ஜித் சிங் புல்​லர் நேற்று தனது பதவியை ராஜி​னாமா செய்​தார்.

பஞ்​சாப் மாநிலம் அமிர்​தசரஸில் உள்ள மாநிலக் கிடங்கு கழக மேலா​ளர் ககன்​தீப் சிங் ரந்​தாவா தற்​கொலை செய்து கொண்​டார். இந்​நிலை​யில், ரந்​தாவா பேசும் வீடியோ சமூக வலை​தளங்​களில் நேற்று வெளி​யானது. அதில், தான் விஷம் அருந்​தி​விட்​ட​தாக​வும், அமைச்​சர் லால்​ஜித் சிங் புல்​லர் தனக்கு தொல்லை கொடுத்​த​தாக​வும் குற்​றம் சாட்​டி​யிருந்​தார்.

இந்​நிலை​யில், முதல்​வர் பகவந்த் மான் கேட்​டுக் கொண்​டதற்​கிணங்க, அமைச்​சர் லால்​ஜித் சிங் புல்​லர் நேற்று தனது பதவியை ராஜி​னாமா செய்​தார். தரன் தரன் மாவட்​டத்​தில் உள்ள பட்டி தொகுதி எம்​எல்​ஏ.​வான புல்​லர், தனது முகநூல் பதி​வில், ‘‘என் மீதான குற்​றச்​சாட்​டில் உண்மை இல்​லை. எனது கட்சி எப்​போதும் உண்​மை​யின் பக்​கம் நிற்​கும். எனவே என் மீதான குற்​றச்​சாட்​டு​கள் முறை​யாக விசா​ரிக்​கப்பட வேண்​டும் என்று விரும்​பு​கிறேன். இந்த விசா​ரணை முடி​யும் வரை, எனது ராஜி​னா​மாவை ஏற்​கு​மாறு கட்​சி​யை​யும் முதல்​வரை​யும் கேட்​டுக் கொள்​கிறேன்’’ என்று தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து விசா​ரணை நடத்​து​மாறு தலை​மைச் செய​லா​ள​ருக்கு உத்​தர​விட்​டுள்​ள​தாக முதல்​வர் பகவந்த் மான் தெரி​வித்​துள்​ளார். நியாய​மான விசா​ரணை நடை​பெற வேண்​டும் என்​ப​தற்​காகவே பதவி வில​கு​மாறு அமைச்​சரை கேட்​டுக் கொண்​ட​தாக மான் கூறி​னார்.

புல்​லரின் ராஜி​னாமா குறித்த செய்​தி​யாளர்​களின் கேள்விக்கு பதிலளித்த மான், ‘‘இதன் பின்​னணி​யில் உள்ள காரணங்​கள் என்ன என்​பது விசா​ரணை​யில் தெரிய வரும். விசா​ரணைக்கு முன்​ன​தாகவே அமைச்​சரின் ராஜி​னா​மாவை நாங்​கள் பெற்​றுக் கொண்​டோம். இதனால் விசா​ரணை​யில் யாரும் தலை​யிடவோ அல்​லது அழுத்​தம் கொடுக்​கவோ முடி​யாது’’ என்​றார்.

இதுகுறித்து சிரோமணி அகாலி தளத் தலை​வர் பிக்​ரம் சிங் மஜித்​தியா கூறும்​போது, ‘‘புல்​லர் தனது உதவி​யாள​ருக்கு டெண்​டர் வழங்​கு​மாறு ரந்​தா​வாவுக்கு அழுத்​தம் கொடுத்​துள்​ளார். ஆனால் அவர் தகு​தி​யான ஒரு​வரைத் தேர்ந்​தெடுத்​துள்​ளார்.

இதையடுத்​து, ரந்​தா​வா அமைச்​சர் வீட்​டுக்கு அழைக்​கப்​பட்டு தாக்​கப்​பட்​டுள்​ளார். மேலும் ரூ.10 லட்​சம் லஞ்​சம் வாங்​கிய​தாக ஒப்​புக்​கொள்​ளு​மாறு அவரை வற்​புறுத்​தி​ய​தாகக் கூறப்​படு​கிறது. எனவே இதுகுறித்து வி​சா​ரித்​து நடவடிக்​கை எடுக்​க வேண்​டும்​’’ என வலி​யுறுத்​தி​னார்​.

அதிகாரியைத் தற்கொலைக்குத் தூண்டியதாகப் புகார்: பஞ்சாப் அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர் ராஜினாமா
ரம்ஜான் மற்றும் நவ்ரோஸ் பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in