போதைக்கு அடிமை​யான 10,656 பேரை மீட்ட பஞ்​சாப் அரசு

போதைக்கு அடிமை​யான 10,656 பேரை மீட்ட பஞ்​சாப் அரசு
Updated on
1 min read

சண்​டிகர்: பஞ்​சாபில் ஆம் ஆத்மி அரசு கடந்த 2025 மார்ச் மாதம் ‘யுத் நஷி​யான் விருத்’ (போதைக்கு எதி​ரான போர்) என்ற பிரச்சாரத்​தைத் தொடங்​கியது. இதன் கீழ், போதைப் ​பொருள் தடுப்​புச் சட்​டத்​தின் (என்​டிபிஎஸ்) பிரிவு 64 A-ன் ​படி, இது​வரை 10,656 பேருக்​குத் தண்​டனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்​ளது.

கடந்த 2025 மார்ச் 1 முதல் 2026 ஜூலை 6 வரை பஞ்​சாப் போலீஸார் போதைப்​ பொருள் தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் 51,516 வழக்​கு​களைப் பதிவு செய்​து, 67,519 பேரைக் கைது செய்துள்ளனர். இதே கால​கட்​டத்​தில், 10,000-க்​கும் மேற்பட்டோருக்குத் தண்​டனையி​ல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்​ளது.

இது போதைப் ​பொருள் விநி​யோகத்​தைத் தடுப்​ப​தோடு, பாதிக்கப்​பட்​ட​வர்​களை மருத்​துவ வசதி​களு​டன் இணைக்​கும் போலீ​ஸாரின் இரட்டை அணுகு​ முறையைப் பிர​திபலிக்​கிறது. குறைந்த அளவில் போதைப் ​பொருள் வைத்​திருந்​ததற்​காக இவர்களைத் தண்​டிப்​ப​தற்​குப் பதிலாக, அரசு மறு​வாழ்வு மையங்களில் சிகிச்​சைக்​காக அனு​ம​தித்​துள்​ள​தாக தெரிவிக்கப்பட்​டுள்​ளது.

இது குறித்து பஞ்​சாப் காவல்​ துறை தலைமை இயக்​குநர் (டிஜிபி) கவுரவ் யாதவ் கூறுகை​யில், “போதைக்கு எதி​ரான போராட்​டம் என்​பது போதைப் பொருள் கடத்​தல்​ காரர்​களைக் கைது செய்​வது மட்​டுமல்ல, பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் மீண்டு வர வாய்ப்​பளிப்​பதும் ஆகும்” என்​றார்.

போதைக்கு அடிமை​யான 10,656 பேரை மீட்ட பஞ்​சாப் அரசு
ஷிண்​டேவுடன் சரத் பவார் திடீர் சந்திப்பு - உத்தவ் தாக்கரே சிவசேனா, காங்​கிரஸ் கலக்​கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in