சத்திரிய கர்ணி சேனா அமைப்பின் தேசியத் தலைவர் ராஜ் ஷெகாவத்

சத்திரிய கர்ணி சேனா அமைப்பின் தேசியத் தலைவர் ராஜ் ஷெகாவத்

சனாதனத்தை குறிவைக்கும் படங்களுக்கு எதிராக போராட்டம்

Published on

புதுடெல்லி: சத்திரிய கர்ணி சேனா அமைப்பின் தேசியத் தலைவர் ராஜ் ஷெகாவத் நேற்று கூறியதாவது: மாற்று மதத்தினர் மற்றும் சமூகத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் படமெடுக்கும் மும்பை தயாரிப்பாளர்களின் வீடுகளுக்கே சென்று கர்ணி சேனா தொண்டர்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

விரைவில் வெளியாக இருக்கும் "யாதவ் ஜி கி லவ் ஸ்டோரி" மற்றும் "கூஸ்கோர் பண்டட்" ஆகிய திரைப்படங்கள் மாற்று சமூகத்தினரை அவமதிக்கும் வகையில் உள்ளது. சத்ரிய, பிராமண சமூகங்களைக் குறிவைத்த தயாரிப்பாளர்கள் இப்போது யாதவ சமூகத்தை இழிவுபடுத்துகின்றனர்.

சனாதனத்தை குறிவைத்து நமது தெய்வங்களை கேலி செய்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு பாடம் புகட்டும் நேரம் வந்துவிட்டது. கர்ணி சேனா தொண்டர்களை அதற்கு தயாராக இருக்குமாறு நான் உத்தரவிடுகிறேன். இவ்வாறு ஷெகாவத் கூறினார்.

<div class="paragraphs"><p>சத்திரிய கர்ணி சேனா அமைப்பின் தேசியத் தலைவர் ராஜ் ஷெகாவத்</p></div>
திருப்பூரில் வங்க தேசத்தினர் 6 பேர் கைது: தமிழகம் முழுவதும் கண்காணிப்பு தீவிரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in