திருப்பூரில் வங்க தேசத்தினர் 6 பேர் கைது: தமிழகம் முழுவதும் கண்காணிப்பு தீவிரம்

பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக வேறு யாரேனும் உள்ளனரா என விசாரணை
திருப்பூரில் வங்க தேசத்தினர் 6 பேர் கைது: தமிழகம் முழுவதும் கண்காணிப்பு தீவிரம்
Updated on
1 min read

சென்னை / திருப்பூர்: ​திருப்​பூரில் வங்க தேசத்​தினர் 6 பேர் கைதான நிலை​யில், பாகிஸ்​தான் பயங்​கர​வாத அமைப்​பு​களுக்கு ஆதர​வாக வேறு யாரேனும் உள்​ளனரா என்​பது தொடர்​பாக தமிழகம் முழு​வதும் போலீ​ஸார் கண்​காணிப்பை தீவிரப்​படுத்தி உள்​ளனர்.

பாகிஸ்​தான் பயங்​கர​வாத அமைப்​புக்கு ஆதர​வாக​வும், பாது​காப்பு படை​யினரை அச்​சுறுத்​தும் வகை​யிலும் டெல்​லி​யில் சுவரொட்டி ஒட்​டப்​பட்​டது. இதில் தொடர்​புடைய​வர்​களுக்கு ஆதர​வாக, திருப்​பூரில் முறை​கே​டாக தங்​கி​யிக்​கும் வங்க தேசத்​தினர் சிலர் செயல்​பட்​ட​தாகக் கூறி டெல்லி போலீ​ஸார் அம்​மா​பாளை​யம், பல்​லடம், ஊத்​துக்​குளியைச் சேர்ந்த 6 பேரை கைது செய்​து,டெல்​லிக்கு அழைத்​துச் சென்​றனர்.

தொடர்ந்​து, திருப்​பூர் மாநகரில் பல்​வேறு இடங்​களில் தங்​கி​யுள்ள வடமாநிலத்​தவர் மற்​றும் சந்​தேக நபர்​கள் குறித்து போலீ​ஸார் தீவிர​மாக விசா​ரித்து வரு​கின்​றனர். பிடிபட்ட 6 பேருடன் தொடர்​பில் இருந்த நபர்​கள் குறித்​தும் போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

வங்க தேசத்​தினர் தங்​களை மேற்​கு​வங்க மாநிலத்​தைச் சேர்ந்​தவர்​கள் என்​றுகூறி திருப்​பூர் பனியன் நிறு​வனங்​களில் வேலைக்கு சேர்​வ​தால், மேற்​கு​வங்க மாநிலத் தொழிலா​ளர்​கள் அதி​கம் பணிபுரி​யும் இடங்​களில் மத்​திய, மாநில உளவுத் துறை போலீ​ஸார் ரகசி​ய​மாக விசா​ரித்து வரு​கின்​றனர்.

அதே​போல, ஏற்​கெனவே கைதானவர்​கள் மற்​றும் முறை​கே​டாகத் தங்​கி​யிருந்து கைதானவர்​கள் யாரும் தொடர்​பில் உள்​ளார்​களா என்​பது தொடர்​பாக​வும் உளவுத் துறை போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

இதுகுறித்து திருப்​பூர் காவல் ஆணை​யர் ராஜேந்​திரன் கூறும்​போது, “திருப்​பூரில் கைது செய்​யப்​பட்ட 6 பேரிடம், டெல்லி போலீ​ஸார் விசா​ரிக்​கத் தொடங்கி உள்​ளனர். அவர்​களு​டன் வேறு யாருக்​கும் தொடர்​புள்​ளதா என்​பது இனிமேல்​தான் தெரிய​வரும். கடந்த சில மாதங்​களில் 200-க்​கும் மேற்​பட்ட வங்க தேசத்​தினர் திருப்​பூரில் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இந்த விவ​காரத்தை அடுத்​து, அனைத்து இடங்​களி​லும் சந்​தேகப்​படும் நபர்​கள் தொடர்​பாக ரகசி​ய​மாக விசா​ரித்து வரு​கிறோம். குற்​ற​வாளி​கள் யாரும் தப்ப முடி​யாது” என்​றார்.

இதற்​கிடை​யில், பாகிஸ்​தான் பயங்​கர​வா​தி​கள் மட்​டுமின்​றி, வேறு பயங்​கர​வாத அமைப்​பு​களுக்கு நேரடி​யாகவோ, மறை​முக​மாகவோ ஆதர​வாளர்​கள் யாரேனும் உள்​ளனரா என்று தமிழக தீவிர​வாத தடுப்​புப் பிரிவு போலீ​ஸார் தீவிர​மாக விசா​ரித்து வரு​வதுடன், தமிழகம் முழு​வதும் கண்​காணிப்பை தீவிரப்​படுத்தி உள்​ளனர்.

இவர்​களுக்கு உதவி​யாக மாநில உளவுப் பிரிவு போலீ​ஸாரும் களத்​தில் இறக்​கி​யுள்​ளனர். சந்​தேக நபர்​கள் யாராக இருந்​தா​லும், அவர்​களைப் பிடித்து விசா​ரிக்க டிஜிபி உத்​தர​விட்​டுள்​ளார். மேலும், சந்​தேக நபர்​கள் குறித்து தகவல்​களைத் தெரிவிக்​கலாம் என்​றும், தகவல் அளிப்​போரின் விவரம் ரகசி​ய​மாக வைக்​கப்​படும் என்​றும் காவல் துறை அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

திருப்பூரில் வங்க தேசத்தினர் 6 பேர் கைது: தமிழகம் முழுவதும் கண்காணிப்பு தீவிரம்
கொடைக்கானல்: தொழிலதிபரை கொன்ற கும்பல் தலைமறைவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in