முஸ்லிம் மாணவரை தீவிரவாதி என திட்டிய பேராசிரியர் பணி இடைநீக்கம்

முஸ்லிம் மாணவரை தீவிரவாதி என திட்டிய பேராசிரியர் பணி இடைநீக்கம்
Updated on
1 min read

பெங்களூரு: பெங்களூரு கல்லூரியில் முஸ்லிம் மாணவரை பேராசிரியர் ஒருவர் தீவிரவாதி என திட்டிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ வெளியானதால், அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

பெங்களூருவில் உள்ள பி.இ.எஸ். கல்லூரியில் முஸ்லிம் மாணவர் ஒருவர் இளங்கலை 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை அவர் காலர் இல்லாத ‘டி ஷர்ட்' அணிந்து வகுப்புக்கு வந்ததால் பேராசிரியர் முரளிதர் தேஷ்பாண்டே கோபமடைந்தார். அவரை ‘தீவிரவாதி’ என்று திட்டி, மத ரீதியான வெறுப்புக் கருத்துக்களை உதிர்த்தார்.

இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் பேராசிரியர் முரளிதர் தேஷ்பாண்டேவை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

முஸ்லிம் மாணவரை தீவிரவாதி என திட்டிய பேராசிரியர் பணி இடைநீக்கம்
இன்ஜின் கோளாறு காரணமாக டெல்லியில் இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in